பொது செய்தி

தமிழ்நாடு

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்; போலீசார் விழிப்புணர்வு

Added : ஆக 25, 2021
Share
Advertisement
கடலுார் : எஸ்.பி., சக்திகணேசன் அறிவுரைப்படி, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து பரங்கிப்பேட்டை அடுத்த சின்னகுமட்டி கிராமத்தில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆகினேஸ்மேரி தலைமையிலான போலீசார், போக்சோ சட்டம், குழந்தை திருமணம் தடுப்பது, பாலியல் தாக்குதல், மொபைல் போனில் ஆபாச படங்கள் வந்தால் புகார்

கடலுார் : எஸ்.பி., சக்திகணேசன் அறிவுரைப்படி, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து பரங்கிப்பேட்டை அடுத்த சின்னகுமட்டி கிராமத்தில் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

சிதம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஆகினேஸ்மேரி தலைமையிலான போலீசார், போக்சோ சட்டம், குழந்தை திருமணம் தடுப்பது, பாலியல் தாக்குதல், மொபைல் போனில் ஆபாச படங்கள் வந்தால் புகார் செய்வது, பெண்கள் மற்றும் சிறார்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும், 1091, 188 இலவச உதவி எண்கள் மூலம் பெண்களுக்கு எதிரான புகார் தெரிவிக்கவும், 1098 என்ற எண்ணில் சிறுவர்களுக்கு எதிரான புகார் தெரிவிக்கவும் அறிவுறுத்தினர்.

நிகழ்ச்சியில் சப் இன்ஸ்பெக்டர்கள் பொன்மகரம், திரிபுரசுந்தரி, ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் கீதா, பால்ராஜ், பெண் தலைமை காவலர் பாக்கிய லட்சுமி ஆகியோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X