சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் கடத்தல் மேலும் ஒருவர் கைது

Added : ஆக 25, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் அருகே, அரிசி ஆலை உரிமையாளர் மகன் கடத்தப்பட்ட வழக்கில், மேலும் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்து 52 லட்சம் ரூபாயை மீட்டனர்.திருப்பூர் மாவட்டம், காங்கேயம், காடையூரைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி; அரிசி ஆலை உரிமையாளர். இவரது மகன் சிவபிரதீப், 22. இவரை 22ம் தேதி காருடன் ஏழு பேர் கும்பல் கடத்தி சென்றது.கடத்தல் கும்பலிடம், ஈஸ்வரமூர்த்தி 3 கோடி ரூபாய் வழங்கி,

திருப்பூர்:திருப்பூர் அருகே, அரிசி ஆலை உரிமையாளர் மகன் கடத்தப்பட்ட வழக்கில், மேலும் ஒருவரை போலீசார் நேற்று கைது செய்து 52 லட்சம் ரூபாயை மீட்டனர்.

திருப்பூர் மாவட்டம், காங்கேயம், காடையூரைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி; அரிசி ஆலை உரிமையாளர். இவரது மகன் சிவபிரதீப், 22. இவரை 22ம் தேதி காருடன் ஏழு பேர் கும்பல் கடத்தி சென்றது.கடத்தல் கும்பலிடம், ஈஸ்வரமூர்த்தி 3 கோடி ரூபாய் வழங்கி, மகனை மீட்டு வந்தார். காங்கேயம் போலீசார் வழக்கு பதிந்து, அரிசி ஆலை முன்னாள் ஊழியர்கள் இருவர் உட்பட ஐந்து பேரை கைது செய்து, 1.99 கோடி ரூபாயை மீட்டனர்.

இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த ஜாபர் சாதிக், 37 என்பவர், பழநி கீரனுாரில் நேற்று கைது செய்யப்பட்டார். அவரிடம், 52 லட்சம் ரூபாய் மீட்கப்பட்டது. தலைமறைவாக உள்ள பாலன் என்பவரை தனிப்படையினர் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X