சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இளம்பெண் கொலை நகைகள் மாயம்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
அவிநாசி:அவிநாசியில், வீட்டில் இளம்பெண் கொல்லப்பட்டு கிடந்தார்.திருப்பூர் மாவட்டம், அவிநாசியைச் சேர்ந்தவர் விஜய், 35. பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி பிரியா, 30. இரு மகள்கள் உள்ளனர்.நேற்று விஜய், தன் இரு மகள்களையும் அருகே உள்ள பள்ளியில் சேர்ப்பதற்காக, அழைத்து சென்றுள்ளார்.தன் மொபைல் போன் அழைப்பை, மனைவி ஏற்காததால் சந்தேகமடைந்த விஜய், மதியம் 1:30

அவிநாசி:அவிநாசியில், வீட்டில் இளம்பெண் கொல்லப்பட்டு கிடந்தார்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசியைச் சேர்ந்தவர் விஜய், 35. பின்னலாடை ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மனைவி பிரியா, 30. இரு மகள்கள் உள்ளனர்.நேற்று விஜய், தன் இரு மகள்களையும் அருகே உள்ள பள்ளியில் சேர்ப்பதற்காக, அழைத்து சென்றுள்ளார்.

தன் மொபைல் போன் அழைப்பை, மனைவி ஏற்காததால் சந்தேகமடைந்த விஜய், மதியம் 1:30 மணிக்கு வீட்டின் அருகில் இருக்கும், மளிகைக்கடை உரிமையாளரை அழைத்து விபரம் கூறியுள்ளார். அவர், விஜய் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, சமையலறையில், பிரியா ரத்தக் காயங்களுடன் இறந்து கிடந்தது தெரிந்தது.பிரியா அணிந்திருந்த 4 சவரன் தங்க நகை, காலில் அணிந்திருந்த வெள்ளி கொலுசு காணாமல் போயுள்ளன. தாடையில் ஆழமான வெட்டுக்காயம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் லேசான காயம் இருந்தது.

எஸ்.பி., செஷாங் சாய், கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரித்தார். மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. நகைக்காக கொலை நடந்ததா, வேறு காரணங்கள் உள்ளதா என அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X