சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் ஊழியர் தற்கொலை முயற்சி

Added : ஆக 25, 2021
Share
Advertisement
விருத்தாசலம் : விருத்தாசலத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் ஸ்டேட் பேங்க் அருகே டாஸ்மாக் உள்ளது. இதன் மேற்பார்வையாளர் ரவி, விற்பனையாளர்கள் ரமேஷ், குப்புசாமி, வீரசேகர், வேல்முருகன். இவர்கள் விற்பனையில் முறைகேடு செய்ததாக, தமிழ்நாடு வாணிப கழக அதிகாரிகள் கடந்த 18 ம் தேதி, சஸ்பெண்ட்

விருத்தாசலம் : விருத்தாசலத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டாஸ்மாக் ஊழியர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலுார் மாவட்டம், விருத்தாசலம் ஸ்டேட் பேங்க் அருகே டாஸ்மாக் உள்ளது. இதன் மேற்பார்வையாளர் ரவி, விற்பனையாளர்கள் ரமேஷ், குப்புசாமி, வீரசேகர், வேல்முருகன். இவர்கள் விற்பனையில் முறைகேடு செய்ததாக, தமிழ்நாடு வாணிப கழக அதிகாரிகள் கடந்த 18 ம் தேதி, சஸ்பெண்ட் செய்தனர். அதற்கான உத்தரவு நகல் வராததால், நேற்று வழக்கம் போல் டாஸ்மாக் கடையை திறந்து விற்பனையில் ஈடுபட்டனர்.

அப்போது புதிதாக நியமிக்கப்பட்ட மேற்பார்வையாளர் பரணிதரன், விற்பனையாளர்கள் கார்த்திகேயன், சசிக்குமார் ஆகியோர் நேற்று கடைக்கு வந்தனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட விற்பனையாளர்களிடம் கணக்குகளை ஒப்படைக்குமாறு கேட்டனர். இதனால் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ரமேஷ் என்ற விற்பனையாளரை மட்டும் வெளியே விடாமல் உள்ளே வைத்து பூட்டினர்.

ஆத்திரமடைந்த அவர் டாஸ்மாக் கடை உள்ளே கேனில் இருந்த சானிடைசரை குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு நிலவியது. தகலறிந்த விருத்தாசலம் போலீசார், கடையை திறந்து, ரமேஷிடம் இருந்த சானிடைசரை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர். இப் பிரச்னையால் காலை 10:00 மணி முதல் பகல் 12:30 மணி வரை கடையில் விற்பனை நடக்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X