சில வரி செய்திகள்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சில வரி செய்திகள்

Added : ஆக 25, 2021
Share
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைதுகோவை: கோவை மாவட்டம், கோவிந்தநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ், 42; சுமை துாக்கும் தொழிலாளி. இவர், தன் நிலத்துக்கான பட்டாவில் பெயர் மாற்றம் கோரி, வெள்ளானைப்பட்டி வி.ஏ.ஓ., அலுவலகத்தில், மே மாதம் விண்ணப்பித்தார். இரண்டு நாட்களுக்கு முன், வி.ஏ.ஓ., குமாரிடம் கேட்டபோது, 3,500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பால்ராஜ் தகவல்
 சில வரி செய்திகள்

லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

கோவை: கோவை மாவட்டம், கோவிந்தநாயக்கன் பாளையத்தைச் சேர்ந்தவர் பால்ராஜ், 42; சுமை துாக்கும் தொழிலாளி. இவர், தன் நிலத்துக்கான பட்டாவில் பெயர் மாற்றம் கோரி, வெள்ளானைப்பட்டி வி.ஏ.ஓ., அலுவலகத்தில், மே மாதம் விண்ணப்பித்தார். இரண்டு நாட்களுக்கு முன், வி.ஏ.ஓ., குமாரிடம் கேட்டபோது, 3,500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்ச ஒழிப்புத் துறைக்கு பால்ராஜ் தகவல் தெரிவித்தார். நேற்று மதியம், 3:30 மணிக்கு பால்ராஜ், குமாரிடம் 3,500 ரூபாயை கொடுத்தார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், குமாரை கைது செய்தனர்.

மருத்துவ மாணவி தற்கொலை

புதுச்சேரி: ஆந்திர மாநிலம், ராமச்சந்திராபுரத்தைச் சேர்ந்தவர் சத்தியநாராயணன் மகள் ஸ்பந்தனா, 30. புதுச்சேரி, வில்லியனுார் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரியில், தோல் வியாதிகள் குறித்து பட்ட மேற்படிப்பு படித்து வந்தார்.கல்லுாரி வளாகத்தில் உள்ள விடுதியில் தங்கி இருந்தார். நேற்று முன்தினம் இரவு, ஸ்பந்தனா தன் அறையில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். காரணம் குறித்து, வில்லியனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

போதையில் சூப்பர்வைசர் பலி

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே பாளமுத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 50. இவர், பட்டுக்கோட்டை தங்கவேல் நகரில் உள்ள அபார்ட்மென்டில் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். இவர் தங்குவதற்காக, இரண்டாவது மாடியில் அறை ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு, அறையில் மது அருந்தி வெளியே வந்தபோது, பால்கனியில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X