சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோவில் வாலிபர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமி பாலியல் பலாத்காரம்: 'போக்சோ'வில் வாலிபர் கைது

Added : ஆக 25, 2021
Share
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்கள்ளக்குறிச்சி அடுத்த விருகாவூர் இந்திரா நகர் புதுகாலனியைச் சேர்ந்தவர் மணி மகன் சத்தியமூர்த்தி, 29; இரண்டு குழந்தைகள் உள்ளனர்.நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் அதே ஊரைச் சேர்ந்த 13 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்

கள்ளக்குறிச்சி அடுத்த விருகாவூர் இந்திரா நகர் புதுகாலனியைச் சேர்ந்தவர் மணி மகன் சத்தியமூர்த்தி, 29; இரண்டு குழந்தைகள் உள்ளனர்.நேற்று முன்தினம் இரவு 11:30 மணியளவில் அதே ஊரைச் சேர்ந்த 13 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.இதற்கிடையே, வீட்டில் துாங்கிய சிறுமியைக் காணவில்லை என அவரது பெற்றோர் தேடினர். அப்போது, சத்தியமூர்த்தியின் வீட்டிலிருந்து வந்த சிறுமியிடம் விசாரித்தனர்.

அதில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்தது. ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் அப்பகுதியினர் சத்தியமூர்த்திக்கு தர்மஅடி கொடுத்தனர். இதில் அவர் படுகாயமடைந்தார்.இது குறித்த புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து சத்தியமூர்த்தியை கைது செய்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X