சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கத்தியை காட்டி வழிப்பறி

Added : ஆக 25, 2021
Share
Advertisement
வானுார் : வானுார் அருகே பைக்கில் சென்றவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் மற்றும் மொபைல் போனை வழிப்பறி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அடுத்த பெரியபாபுசமுத்திரம் குடியார் தெருவைச் சேர்ந்தவர் சாந்தப்பன், 37; இவர் நேற்று புதுச்சேரி கோரிமேடு அருகே நடந்த தனது உறவினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வழுதாவூர்

வானுார் : வானுார் அருகே பைக்கில் சென்றவரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் மற்றும் மொபைல் போனை வழிப்பறி செய்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அடுத்த பெரியபாபுசமுத்திரம் குடியார் தெருவைச் சேர்ந்தவர் சாந்தப்பன், 37; இவர் நேற்று புதுச்சேரி கோரிமேடு அருகே நடந்த தனது உறவினரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க வழுதாவூர் சாலை வழியாக பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

பெரம்பை சாலை சந்திப்பு அருகே உள்ள சர்ச் எதிரே வந்தபோது, பைக்கில் வந்த இரண்டு மர்ம நபர்கள், சாந்தப்பனை வழிமறித்து நிறுத்தி, கத்தியைக் காட்டி மிரட்டி 2,000 ரூபாய், மற்றும் மொபைல் போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.சாந்தப்பன் அளித்த புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X