சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியை கடத்தியவர் 'போக்சோ'வில் கைது

Added : ஆக 25, 2021
Share
Advertisement
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே சிறுமியைக் கடத்திய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பாவளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்காமன் மகன் லட்சுமணன், 21; இவர், கடந்த ஜூலை 1ம் தேதி 17 வயது சிறுமியை கடத்திச் சென்றார். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே சிறுமியைக் கடத்திய வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த பாவளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்காமன் மகன் லட்சுமணன், 21; இவர், கடந்த ஜூலை 1ம் தேதி 17 வயது சிறுமியை கடத்திச் சென்றார். இதுகுறித்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில், லட்சுமணன் அச்சிறுமியை திருமணம் செய்து கொண்டு சின்னசேலம் அடுத்த சிறுவத்துார் கிராமத்தில் வசித்து வந்தது தெரிந்தது. சப் இன்ஸ்பெக்டர் திருமால் மற்றும் போலீசார் லட்சுமணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சிறுமியை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X