சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முன்விரோத தகராறு தி.மு.க., பிரமுகர் கைது

Added : ஆக 25, 2021
Share
Advertisement
விழுப்புரம் : வளவனுார் அருகே முன்விரோதம் காரணமாக, இரு தரப்பு மோதலில் தி.மு.க., பிரமுகர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் மாவட்டம் வளவனுார் அடுத்த சின்னமடம் பகுதியைச் சேர்ந்தவர் ரட்சகன், 49; தி.மு.க., கிளைச் செயலாளர். அதே பகுதியைச் சேர்ந்தவர் புருேஷாத்தமன், 35; தி.மு.க., உறுப்பினர். அமைச்சர் பொன்முடி பிறந்த நாளையொட்டி அப்பகுதியில் ரட்சகன் போஸ்டர்

விழுப்புரம் : வளவனுார் அருகே முன்விரோதம் காரணமாக, இரு தரப்பு மோதலில் தி.மு.க., பிரமுகர் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம் வளவனுார் அடுத்த சின்னமடம் பகுதியைச் சேர்ந்தவர் ரட்சகன், 49; தி.மு.க., கிளைச் செயலாளர். அதே பகுதியைச் சேர்ந்தவர் புருேஷாத்தமன், 35; தி.மு.க., உறுப்பினர். அமைச்சர் பொன்முடி பிறந்த நாளையொட்டி அப்பகுதியில் ரட்சகன் போஸ்டர் ஒட்டியிருந்தார். அதில், புருஷோத்தமன், பெயர் இல்லாததால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் புருஷோத்தமன் மற்றும் அவரது தம்பிகள் சஞ்சீவி, 32; மனோகர் மற்றும் ஆதரவாளர் கோவிந்தன் ஆகியோர் சேர்ந்து ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தாரைத் திட்டி, தாக்கினர். இதனால், இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர்.இரு தரப்பு புகார்களின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து புருஷோத்தமன், சஞ்சீவி ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X