கஞ்சா போதையில் குத்துபாடல் பதிவிட்டவர் உட்பட இருவர் கைது | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கஞ்சா போதையில் குத்துபாடல் பதிவிட்டவர் உட்பட இருவர் கைது

Added : ஆக 25, 2021
Share
பண்ருட்டி : பண்ருட்டி அருகே கஞ்சா போதையில் குத்துப்பாட்டு பாடி சமூக வலை தளத்தில் பதிவிட்ட வாலிபர் மற்றும் கஞ்சா வியாபாரியை போலீசார் கைது செய்தனர். கடலுார் மாவட்டம் , பண்ருட்டி ஒன்றியம், ஆ.நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் படையப்பா,20; இவர் சில தினங்களுக்கு முன்பு கஞ்சா போதையில், குத்துப்பாட்டு பாடி வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ் புக் பக்கத்தில் பதிவிட்டார். இந்த பாடல் சமூக வலை
 கஞ்சா போதையில் குத்துபாடல் பதிவிட்டவர் உட்பட இருவர் கைது

பண்ருட்டி : பண்ருட்டி அருகே கஞ்சா போதையில் குத்துப்பாட்டு பாடி சமூக வலை தளத்தில் பதிவிட்ட வாலிபர் மற்றும் கஞ்சா வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம் , பண்ருட்டி ஒன்றியம், ஆ.நத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் படையப்பா,20; இவர் சில தினங்களுக்கு முன்பு கஞ்சா போதையில், குத்துப்பாட்டு பாடி வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ் புக் பக்கத்தில் பதிவிட்டார். இந்த பாடல் சமூக வலை தளத்தில் பரவியது.புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார், கஞ்சா போதையில் குத்துபாட்டு பதிவிட்ட படையப்பா மற்றும் கஞ்சா விற்ற பண்ருட்டி அம்பேத்கர் நகர் சந்துரு,22; ஆகியோரை கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X