பொது செய்தி

தமிழ்நாடு

ஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மை

Added : ஆக 25, 2021
Share
Advertisement
கடலுார் : விபத்தில் காயமடைந்தவரின் நகை, பணத்தை மீட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டினர். கடலுார், வன்னியர்பாளையத்தை சேர்ந்தவர் ராம்குமார், 31; இவர், நேற்று காலை நெல்லிக்குப்பத்தில் இருந்து கடலுார் நோக்கி பைக்கில் வந்தார். காராமணிக்குப்பம் அருகே அவர் மீது மரக்கிளை விழுந்து, காயமடைந்தார். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு,

கடலுார் : விபத்தில் காயமடைந்தவரின் நகை, பணத்தை மீட்டு, அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களை பொதுமக்கள் பாராட்டினர்.

கடலுார், வன்னியர்பாளையத்தை சேர்ந்தவர் ராம்குமார், 31; இவர், நேற்று காலை நெல்லிக்குப்பத்தில் இருந்து கடலுார் நோக்கி பைக்கில் வந்தார். காராமணிக்குப்பம் அருகே அவர் மீது மரக்கிளை விழுந்து, காயமடைந்தார். அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு, கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் ராம்குமாரின் 2 சவரன் செயின், மொபைல் போன், ரூ. 5,943 ரொக்கம் ஆகியன சிதறிக்கிடந்தன. அவற்றை எடுத்த ஆம்புலன்ஸ் டிரைவர் குமார், அவசர மருத்துவ உதவியாளர் கலைவாணி ஆகியோர், ராம்குமாரின் குடும்பத்தினரிடம் மருத்துவமனையில் ஒப்படைத்தனர். இதனை பார்த்த மருத்துவ மனை ஊழியர்கள், பொது மக்கள் ஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மையை பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X