பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி போடாத ஆசிரியர்கள்: பள்ளிகளில் அனுமதி இல்லை

Added : ஆக 25, 2021
Share
Advertisement
கடலுார் : ''பள்ளிகள் திறக்கும் நிலையில் ஆசிரியர்கள், ஊழியர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்,'' என, தமிழ்நாடு பாடநுால் கழக மேலாண் இயக்குனர் மணிகண்டன் அறிவுறுத்தினார்.தமிழகத்தில், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, செப்., 1 முதல் வகுப்புகள் நடக்கும் என அரசு அறிவித்துள்ளது. மாவட்டந்தோறும் பள்ளிகளில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ள, ஐ.ஏ.எஸ்.,

கடலுார் : ''பள்ளிகள் திறக்கும் நிலையில் ஆசிரியர்கள், ஊழியர்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்,'' என, தமிழ்நாடு பாடநுால் கழக மேலாண் இயக்குனர் மணிகண்டன் அறிவுறுத்தினார்.

தமிழகத்தில், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, செப்., 1 முதல் வகுப்புகள் நடக்கும் என அரசு அறிவித்துள்ளது. மாவட்டந்தோறும் பள்ளிகளில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ள, ஐ.ஏ.எஸ்., அந்தஸ்திலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.கடலுார் மாவட்டத்தில் நேற்று, தமிழ்நாடு பாடநுால் கழகம் மற்றும் கல்வியியல் மேலாண்மை இயக்குனர் மணிகண்டன் ஆய்வு மேற்கொண்டார்.

பின், அவர் அளித்த பேட்டி:நீண்ட இடைவெளிக்கு பின் பள்ளிகள் திறப்பதால், மாணவர்கள் பாதுகாப்பு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.மாணவர்கள் அச்ச உணர்வு இல்லாமல், வழக்கம் போல் பள்ளிக்கு வந்து செல்வதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.

அதற்கேற்ப ஆசிரியர்களின் செயல்பாடு இருக்க வேண்டும். கொரோனா தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள், பள்ளியில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்கு தயாராக இருக்க வேண்டும்.நீண்ட இடைவெளிக்கு பின், பள்ளிக்கு வரும் மாணவர்களை முதலில் மனரீதியாக தயார் செய்ய வேண்டிய பொறுப்பும் உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.ஆய்வின் போது, சி.இ.ஒ.,(பொறுப்பு) சுந்தரமூர்த்தி, வடலுார் மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X