சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொலை முயற்சி வழக்கு: மூவருக்கு தலா 7 ஆண்டு சிறை

Added : ஆக 25, 2021
Share
Advertisement
கடலுார் : முன்னாள் ஊராட்சித் தலைவரை கொல்ல முயன்ற வழக்கில் 3 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலுார் கோர்ட் தீர்ப்பு கூறியது.கடலுார் மாவட்டம், குள்ளஞ்சாவடி அடுத்த தம்பிப்பேட்டை, கேசவநாராயணபுரம் காலனியைச் சேர்ந்தவர் ரஜினி செல்வம், 52; முன்னாள் ஊராட்சித் தலைவர். இவர், தனது வீட்டின் அருகில் உள்ள நிலத்தில் தென்னங்கன்றுகள் நட்டு வைத்தார். பொது இடத்தில்

கடலுார் : முன்னாள் ஊராட்சித் தலைவரை கொல்ல முயன்ற வழக்கில் 3 பேருக்கு தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கடலுார் கோர்ட் தீர்ப்பு கூறியது.

கடலுார் மாவட்டம், குள்ளஞ்சாவடி அடுத்த தம்பிப்பேட்டை, கேசவநாராயணபுரம் காலனியைச் சேர்ந்தவர் ரஜினி செல்வம், 52; முன்னாள் ஊராட்சித் தலைவர். இவர், தனது வீட்டின் அருகில் உள்ள நிலத்தில் தென்னங்கன்றுகள் நட்டு வைத்தார். பொது இடத்தில் தென்னங்கன்றுகளை எப்படி நடலாம் எனக்கூறி அதே பகுதியைச் சேர்ந்த வரதராஜன், 50; 2017 ஜன., 16ல் அகற்றினார்.

இதற்கு ரஜினி செல்வம் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு தரப்புக்கும் முன்விரோதம் ஏற்பட்டது. மறுநாள் வரதராஜன் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது தரப்பினர் மகாதேவன், 51; செல்வராஜ் மகன் சுரேஷ், 26; ஆகியோர் வீடு புகுந்து ரஜினி செல்வத்தை இரும்பு பைப்பால் தாக்கி கொலை செய்ய முயன்றனர்.

குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப் பதிந்து வரதராஜன் உட்பட மூவரையும் கைது செய்து, கடலுார் 2வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் ஆஜர்படுத்தி வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி மோகன்ராஜ், இவ்வழக்கில் தொடர்புடைய மூவருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் சண்முகம் ஆஜரானார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X