பொது செய்தி

தமிழ்நாடு

சோலாரில் இயங்கும் கார்: மாணவர்கள் கண்டுபிடிப்பு

Added : ஆக 25, 2021
Share
Advertisement
விக்கிரவாண்டி,: விக்கிரவாண்டி சூர்யா இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்கள், பெட்ரோலில் இயங்கும் காரை சோலார் சிஸ்டத்தில் இயங்கும் வகையில் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சூர்யா இன்ஜினியரிங் கல்லுாரியில் மெக்கானிக்கல் பிரிவு இறுதியாண்டு மாணவர்கள் ரகுநாதன் தலைமையில் வல்லரசு, பிரதீப்குமார், சுப்புராஜ், திருக்குமாரசாமி, ரவிசங்கர்,
 சோலாரில் இயங்கும் கார்: மாணவர்கள் கண்டுபிடிப்பு

விக்கிரவாண்டி,: விக்கிரவாண்டி சூர்யா இன்ஜினியரிங் கல்லுாரி மாணவர்கள், பெட்ரோலில் இயங்கும் காரை சோலார் சிஸ்டத்தில் இயங்கும் வகையில் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சூர்யா இன்ஜினியரிங் கல்லுாரியில் மெக்கானிக்கல் பிரிவு இறுதியாண்டு மாணவர்கள் ரகுநாதன் தலைமையில் வல்லரசு, பிரதீப்குமார், சுப்புராஜ், திருக்குமாரசாமி, ரவிசங்கர், கவுதம், ரஞ்சித், பிரதீஷ்குமார், வெங்கடேசன், விஜயராஜா, யோகேஷ் ஆகியோர் கொண்ட குழுவினர் பெட்ரோல் காரில் சோலாரில் இயங்கக் கூடிய வகையில் கண்டுபிடித்துள்ளனர்.

அந்த காரின் செயல் விளக்க நிகழ்ச்சிக்கு, கல்லுாரி முதல்வர் கல்யாண் சக்கரவர்த்தி தலைமை தாங்கினார். துறைத் தலைவர் சங்கர் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில், மாணவர் ரகுநாதன் கூறியதாவது:தற்போதுள்ள பெட்ரோல் காரில் பின்னால் உள்ள ஆக்ஸில் 3 கே.வி., மின்மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான மின்சாரம் காரின் மீது பொருத்தப்பட்டுள்ள 600 வாட்ஸ் சோலார் பேனல் மூலம் மின்சாரம் தயாரித்து மோட்டார் இயக்கப்பட்டு நான்கு வீல் டிரைவாக மாற்றி இயக்கப்படுகிறது.

இன்வெர்ட்டரில் மின்சாரம் சேமிக்கப்பட்டு அதன் மூலம் 55 கி.மீ., துாரம் வரை சோலாரில் இயக்க முடியும். அதன் பிறகு மின் சக்தியை ரீசார்ஜ் செய்து காரை இயக்கலாம்.மின்சார சேமிப்பு இல்லாத நேரத்தில் பெட்ரோலில் உடனடியாக இயக்கிக் கொள்ளலாம். டீசல் காரிலும் இது போன்று இயக்க முடியும். சோலார் பேனல்கள் வைக்க ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவாகும்.இவ்வாறு மாணவர் ரகுநாதன் கூறினர்.

நிகழ்ச்சியில், மெக்கானிக்கல் பிரிவு திட்ட தயாரிப்பு வழிகாட்டி பேராசிரியர் சதிஷ்குமார், பிரபு, விவேகானந்தன் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.புதிய கண்டுபிடிப்பில் ஈடுபட்ட மாணவர்களையும், துறை பேராசிரியர்களையும் கல்லுாரி சேர்மன் கவுதம சிகாமணி, நிர்வாகி விசாலாட்சி பொன்முடி ஆகியோர் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X