பொது செய்தி

தமிழ்நாடு

முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி

Added : ஆக 25, 2021
Share
Advertisement
காட்டுமன்னார்கோவில் : கடலுார் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் சென்னை குடிநீர் தேவைக்கு அனுப்பும் தண்ணீரின் அளவு உயர்த்தப்பட்டுள்ளது. கல்லணையில் இருந்து கீழணைக்கு திறந்து விடப்பட்ட நீரின் அளவு 2,000 கன அடியில் இருந்து 500 கன அடியாக குறைக்கப்பட்டது. இதனால் கீழணைக்கு தண்ணீர் வரத்து 850 கன அடியாக உள்ளது. கீழணையின் நீர் மட்டம் 8.5 அடி
 முழு கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி

காட்டுமன்னார்கோவில் : கடலுார் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்த வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் சென்னை குடிநீர் தேவைக்கு அனுப்பும் தண்ணீரின் அளவு உயர்த்தப்பட்டுள்ளது.

கல்லணையில் இருந்து கீழணைக்கு திறந்து விடப்பட்ட நீரின் அளவு 2,000 கன அடியில் இருந்து 500 கன அடியாக குறைக்கப்பட்டது. இதனால் கீழணைக்கு தண்ணீர் வரத்து 850 கன அடியாக உள்ளது. கீழணையின் நீர் மட்டம் 8.5 அடி ஆகும். கீழணையில் இருந்து வடவாற்றில் நேற்று 850 கன அடி நீர் திறந்ததால் வீராணம் ஏரிக்கு 1,650 கன அடி நீர் வரத்து இருந்தது.

கடந்த 10 நாட்களாக கல்லணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்ததால் வீராணம் ஏரி நேற்று முன்தினம் இரவு முழு கொள்ளளவை எட்டியது. வீராணம் ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடி. இதில் 1,465 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டியதால் சென்னை குடிநீர் தேவைக்கு அனுப்பும் தண்ணீரின் அளவு 52 கன அடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X