சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சுருக்குமடி வலை பறிமுதல் செய்ய முயன்ற அதிகாரிகள் நடுக்கடலில் சுற்றி வளைப்பு

Added : ஆக 25, 2021
Share
Advertisement
கடலுார் : கடலுார் கடல் பகுதியில் புதுச்சேரி மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன்பிடிப்பதை பறிமுதல் செய்ய சென்ற அதிகாரிகள் சுற்றி வளைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.கடலுார் மாவட்ட கடல் பகுதியில், புதுச்சேரி மாநில மீனவர்கள், அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதாக கடலுார் மீன் வளத் துறைக்கு தகவல் கிடைத்தது. மீன்வளத்துறை உதவி
 சுருக்குமடி வலை பறிமுதல் செய்ய முயன்ற அதிகாரிகள் நடுக்கடலில் சுற்றி வளைப்பு

கடலுார் : கடலுார் கடல் பகுதியில் புதுச்சேரி மீனவர்கள் சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன்பிடிப்பதை பறிமுதல் செய்ய சென்ற அதிகாரிகள் சுற்றி வளைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலுார் மாவட்ட கடல் பகுதியில், புதுச்சேரி மாநில மீனவர்கள், அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதாக கடலுார் மீன் வளத் துறைக்கு தகவல் கிடைத்தது. மீன்வளத்துறை உதவி இயக்குனர் சின்னகுப்பன் தலைமையில் ஆய்வாளர் மணிகண்டன், உதவி ஆய்வாளர் பிரபாகரன், மேற்பார்வையாளர் அறிவேந்தன், கடலோர பாதுகாப்பு குழும சப் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று படகு மூலம் கடலுக்குள் சென்றனர்.

நடுக்கடலில் 30க்கும் மேற்பட்ட படகுகளில் சுருக்குமடி வலை பயன்படுத்தி மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இதை பார்த்த அதிகாரிகள், கடலுார் மாவட்ட கடல் பகுதியில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தக் கூடாது என, மைக் மூலம் எச்சரித்து மீன்பிடி படகுகள், சுருக்குமடி வலைகளை பறிமுதல் செய்ய முயற்சித்தனர்.இதனால் ஆத்திரமடைந்த மீனவர்கள், அதிகாரிகளை நடுக்கடலில் சுற்றி வளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

செய்வதறியாது தவித்த அதிகாரிகள், பறிமுதல் நடவடிக்கையை கைவிட்டு, மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தி, கடலுார் மாவட்ட கடல் பகுதியில் இருந்து அவர்களை அப்புறப்படுத்திவிட்டு திரும்பினர். நடுக்கடலில் அதிகாரிகள் சுற்றி வளைக்கப்பட்ட சம்பவம் கடலுாரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X