சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி பலியான சிறுவன் விழுப்புரத்தில் ஒப்பந்ததாரர் கைது

Added : ஆக 25, 2021
Share
Advertisement
விழுப்புரம்:விழுப்புரத்தில் தி.மு.க., கொடிக் கம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி சிறுவன் இறந்த வழக்கில், ஒப்பந்ததாரரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரத்தைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் மகன் தினேஷ், 13; அப்பகுதியில் உள்ள பூந்தோட்டம் அரசு உயர்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.இவர், 20ம் தேதி மதியம் 2:30 மணிக்கு மாம்பழப்பட்டு சாலையில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்த

விழுப்புரம்:விழுப்புரத்தில் தி.மு.க., கொடிக் கம்பம் நடும்போது மின்சாரம் தாக்கி சிறுவன் இறந்த வழக்கில், ஒப்பந்ததாரரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரத்தைச் சேர்ந்தவர் ஏகாம்பரம் மகன் தினேஷ், 13; அப்பகுதியில் உள்ள பூந்தோட்டம் அரசு உயர்நிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு படித்து வந்தார்.இவர், 20ம் தேதி மதியம் 2:30 மணிக்கு மாம்பழப்பட்டு சாலையில் உள்ள ஒரு மண்டபத்தில் நடந்த திருமண விழாவுக்கு, தி.மு.க., பேனர்கள், கட்சிக் கொடிகள் கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

முற்றுப்புள்ளி

அப்போது, மேலே சென்ற உயரழுத்த மின் கம்பியில் கொடிக் கம்பம் உரசியதால், மின்சாரம் தாக்கி தினேஷ் பரிதாபமாக இறந்தார்.சிறுவனின் தாய் லட்சுமி புகாரின்படி, விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.இச்சம்பவம் குறித்து, சட்டசபையில் பா.ஜ., - அ.தி.மு.க., வினர் குரல் எழுப்பினர். 'சிறுவன் இறப்புக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தினர்.

இச்சம்பவத்திற்கு, முதல்வர் ஸ்டாலின் வருத்தத்தை வெளிப்படுத்தியதோடு, உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென தி.மு.க.,வினருக்கு அறிவுறுத்தினார்.இதையடுத்து, விழுப்புரம் மேற்கு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

சிறையில் அடைப்பு

இதில், பேனர், கொடிக் கம்பம் வைக்கும் பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர் வெங்கடேசன், 38 என்பவர், சிறுவன் தினேஷை அஜாக்கிரதையாக கொடிக் கம்பம் நடும் பணியில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.இதையடுத்து, முன்பு பதிந்த இயற்கைக்கு மாறான மரணம் வழக்கை மாற்றி, கொலையாகாத மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிந்தனர். ஒப்பந்ததாரர் வெங்கடேசனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X