சிக்கல் கானூர் கண்மாயை தூர்வாரும் பணியில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா

Added : ஆக 25, 2021
Share
Advertisement
சிவகங்கை : திருப்புவனம் அருகேயுள்ள கானுார் கண்மாயை துார் வார 1.96கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் கண்மாயிலுள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதில் ஏற்பட்ட சிக்கலால் துார் வாரும் பணி முழுமையடையாமல் உள்ளது.கானுார் கண்மாய் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரிய கண்மாயாகும். பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கண்மாய் 425.50 எக்டேர் நிலப்பரப்புஉள்ளது. 2983.45 ஏக்கர் பாசன
 சிக்கல் கானூர் கண்மாயை தூர்வாரும் பணியில்   மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா

சிவகங்கை : திருப்புவனம் அருகேயுள்ள கானுார் கண்மாயை துார் வார 1.96கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் கண்மாயிலுள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதில் ஏற்பட்ட சிக்கலால் துார் வாரும் பணி முழுமையடையாமல் உள்ளது.

கானுார் கண்மாய் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரிய கண்மாயாகும். பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கண்மாய் 425.50 எக்டேர் நிலப்பரப்புஉள்ளது. 2983.45 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. கானுார், கல்லுாரணி, பச்சேரி,மிக்கேல்பட்டினம், வேம்பத்துார், பெரியகோட்டை கிராமங்கள் பயன் பெறுகின்றன.தற்போது இந்த கண்மாயில் பொதுப்பணித்துறையினர் அயன்வாம் திட்டத்தில் துார்வாரும் பணி செய்து வருகின்றனர்.

கரைகளை பலப்படுத்த 85 லட்சம் ரூபாய், 8மடைகள் பராமரிப்பு பணிக்காக 28 லட்சம் ரூபாய், புதிய கழுங்கு அமைக்க 28 லட்சம்ரூபாய், வரத்துக்கால்வாய் துார் வார 28 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு2020 ல் பணிகள் தொடங்கப்பட்டன. 3 மடைகளில் சீரமைப்பு பணி நடந்தாலும்,கரைகளை பலப்படுத்திட கண்மாய்க்குள் உள்ள சீமைக்கருவேல் மரங்களை அகற்றவேண்டும். டெண்டர் தொகை குறைவாக எடுக்கப்பட்டதாக கூறி உயர்நீதிமன்ற மதுரைகிளையில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக கண்மாய் துார் வாரும்பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உலகநாதன் ,பாசன விவசாயிகள் சங்கத்தலைவர்: கண்மாய் பகுதியில் உள்ளசீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிக்கு டெண்டர் எடுத்துள்ளேன். அதில் 10சதவீத மரங்களை அகற்றியுள்ளதற்கான சான்றினை தாசில்தார் வழங்கியுள்ளார். இந்நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து பணியை நிறுத்தி விட்டனர்.மீண்டும்சீமைக்கருவேல மரங்களை அகற்ற அனுமதிக்க வேண்டும்.முத்துராமலிங்கம் வழக்கறிஞர்: கானுார் கண்மாய் பகுதியில் சீமைகருவேல மரங்களைஅகற்றுவது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது.

வனத்துறையினர் தங்களதுஇடத்தில் உள்ள மரங்களை ஏலம் விட்டதாக தெரிவித்தனர். வனத்துறைக்கு நீதிமன்றம்தடை விதித்துள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பதால் சீமைகருவேல மரங்களை அகற்றமுடியாத நிலை உள்ளது.சுந்தரராஜன், பச்சேரி: கானுார் கண்மாய் மூலம் பாசன நிலங்கள் உள்ளன.அப்பகுதியில் உள்ள கிராம மக்களின் பாசனத்திற்கும் நீராதாரத்திற்கும் முக்கிய பங்குவகிக்கிறது. 10 ஆண்டுகளுக்கும் மேலாக கண்மாய் பகுதியில் உள்ள சீமைக்கருவேலமரங்களை அகற்றுவதில் பிரச்னை தொடர்ந்து வருகிறது. மாவட்ட நிர்வாகம்அனைத்து கிராமத்தினரையும் வரவழைத்து சுமூக தீர்வினை ஏற்படுத்தி வழக்கினைமுடித்து துார் வாரும் பணியினை செய்ய முன் வர வேண்டும்.

வெங்கடகிருஷ்ணன், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர்: அயன்வாம்திட்டத்தில் கானுார் கண்மாய் துார் வாரும் பணி குறித்து டெண்டர் விடப்பட்டுபணிகள் நடந்து வருகிறது. கண்மாயின் உட்பகுதியில் சீமைக்கருவேல மரங்கள்அகற்றுவது குறித்து பிரச்னை ஏற்பட்டு, வழக்கு நிலுவையில் உள்ளது.இது குறித்துகலெக்டர், ஆர்.டி.ஓ., ஆகியோர் நேரடியாக ஆய்வு செய்துள்ளோம். சீமைக்கருவேலமரங்களை அப்புறப்படுத்தினால் பணிகளை செய்ய தயாராக உள்ளோம். 2021 நவ.,மாதத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும். கரை பலப்படுத்தும் பணியைசெய்ய முடியாத நிலை உள்ளது.-----------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X