ஆவணமின்றி விதை விற்றால் நடவடிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆவணமின்றி விதை விற்றால் நடவடிக்கை

Added : ஆக 25, 2021
Share
தொண்டாமுத்துார்:'தனியார் விதை விற்பனை நிலையங்களில், உரிய ஆவணமின்றி விதை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் எச்சரித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தொண்டாமுத்துார், ஆலாந்துறை, மதுக்கரை மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில், விதை இருப்பு பலகையை தினசரி பராமரிக்க வேண்டும்.

தொண்டாமுத்துார்:'தனியார் விதை விற்பனை நிலையங்களில், உரிய ஆவணமின்றி விதை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாவட்ட விதை ஆய்வு துணை இயக்குனர் வெங்கடாசலம் எச்சரித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தொண்டாமுத்துார், ஆலாந்துறை, மதுக்கரை மற்றும் கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் விதை விற்பனை நிலையங்களில், விதை இருப்பு பலகையை தினசரி பராமரிக்க வேண்டும். கொள்முதல் செய்யும் அனைத்து பயிர் ரகங்களுக்கும் பதிவு சான்று பெற்றிருக்க வேண்டும்.அனைத்து ரகங்களுக்கும் குவியல் வாரியாக, முளைப்பு திறன் சான்றிதழ் பெற்ற பின்பே, விற்பனை செய்ய வேண்டும். விதை இருப்பு பதிவேடு முறையாக பராமரிக்க வேண்டும். இருப்பில் உள்ள அனைத்து விதை குவியல்களிலும் மாதிரி எடுத்து பகுப்பாய்வு முடிவின்படி, தரமானவற்றையே விற்க வேண்டும். இருப்பு விபரங்களை இணையதளத்தில் முறையாக பதிவேற்றம் செய்ய வேண்டும். காலாவதியான விதைகளை விற்கக்கூடாது; மீறினால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, துணை இயக்குனர் வெங்கடாசலம் கூறியுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X