பொது செய்தி

தமிழ்நாடு

விஷம் வைத்து தெருநாய்கள் கொலை: பொதுமக்கள் அச்சம்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
கோவை;சிங்காநல்லுாரில், தெருநாய்களுக்கு மர்ம நபர்கள் விஷம் வைத்துக் கொலை செய்தது, பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.சிங்காநல்லுார், நேதாஜி வீதி, டி.எச்.என்.பி., குடியிருப்பு பகுதியில் ஏராளமான தெருநாய்கள் உள்ளன. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், உணவளித்து வளர்த்து வருகின்றனர். அப்பகுதிக்குள் சந்தேகப்படும்படி வேறு நபர்கள் வந்தால், தெருநாய்கள் விடுவதில்லை.

கோவை;சிங்காநல்லுாரில், தெருநாய்களுக்கு மர்ம நபர்கள் விஷம் வைத்துக் கொலை செய்தது, பொதுமக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.சிங்காநல்லுார், நேதாஜி வீதி, டி.எச்.என்.பி., குடியிருப்பு பகுதியில் ஏராளமான தெருநாய்கள் உள்ளன. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள், உணவளித்து வளர்த்து வருகின்றனர். அப்பகுதிக்குள் சந்தேகப்படும்படி வேறு நபர்கள் வந்தால், தெருநாய்கள் விடுவதில்லை. இதனால், நாய்களுக்கு உணவு போடக்கூடாது என, சிலர் பிரச்னை செய்து வந்துள்ளனர்.இதுகுறித்து, அப்பகுதியை சேர்ந்தவர்கள் சிங்காநல்லுார் போலீசில் ஏற்கனவே புகார் அளித்திருந்தனர். இச்சூழலில், கடந்த இரு நாட்களில் மூன்று நாய்கள் திடீரென ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்தன. சில நாய்கள் மிகவும் சோர்வாக காணப்படுகின்றன. இவற்றுக்கு விஷம் வைத்திருப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.அப்பகுதியை சேர்ந்த அரவிந்தன் அளித்த புகார் அடிப்படையில், சிங்காநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர். விலங்குகள் நல ஆர்வலர்களும், நாய்களுக்கு விஷம் வைத்த நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளனர்.அங்கு வசிப்பவர்கள் கூறுகையில், 'எங்கள் பகுதியில் தெருநாய்கள் இருப்பதால் புதிய நபர்கள் உள்ளே வருவதில்லை. திருட்டு பயம் இல்லை. திடீரென அடுத்தடுத்து நாய்களுக்கு விஷம் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளன; இதுவரை மூன்று நாய்கள் உயிரிழந்துள்ளன. சில நாய்கள் உயிரிழக்கும் நிலையில் உள்ளன. யாரேனும் திருட திட்டமிட்டு நாய்களுக்கு விஷம் வைத்தார்களா அல்லது நாய்களை பிடிக்காத நபர்கள் விஷம் வைத்தார்களா என, போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X