சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கடன் பிரச்னையால் விபரீத முடிவு! தம்பதி தூக்கிட்டு தற்கொலை

Added : ஆக 25, 2021
Share
Advertisement
கோவை:கடன் பிரச்னை காரணமாக, மனமுடைந்த கணவன்-மனைவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.சிங்காநல்லுார், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முகமது அனீஸ், 44; மின்வாரிய கான்ட்ராக்டராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மும்தாஜ், 35. இவர்களுக்கு, 12ம் வகுப்பு படிக்கும் மகன் மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளனர்.சில மாதங்களுக்கு முன் முகமது அனீஸ், மாடியில்

கோவை:கடன் பிரச்னை காரணமாக, மனமுடைந்த கணவன்-மனைவி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.சிங்காநல்லுார், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் முகமது அனீஸ், 44; மின்வாரிய கான்ட்ராக்டராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மும்தாஜ், 35. இவர்களுக்கு, 12ம் வகுப்பு படிக்கும் மகன் மற்றும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளனர்.சில மாதங்களுக்கு முன் முகமது அனீஸ், மாடியில் இருந்து கீழே விழுந்ததில், முதுகு தண்டில் பாதிப்பு ஏற்பட்டது. வேலைக்குச் செல்ல முடியாமல், பலரிடம் கடன் பெற்று, பிரச்னையில் சிக்கியதாக கூறப்படுகிறது.இச்சூழலில், உறவினர் வீட்டுக்கு மகள் சென்றிருந்த நிலையில், மகன் மற்றும் தம்பதி மட்டும் நேற்று வீட்டில் இருந்தனர். நேற்று காலை மகன் எழுந்து பார்த்தபோது, ஒரு அறையில், தாய் மற்றும் தந்தை தனித்தனியாக துாக்கிட்டு தொங்கியதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். சிங்காநல்லுார் போலீசார் சடலங்களை கைப்பற்றி, அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X