பொது செய்தி

தமிழ்நாடு

24 மணி நேர தொடர் நிகழ்ச்சி: கல்லூரி மாணவர்கள் அசத்தல் 

Added : ஆக 25, 2021
Share
Advertisement
கோவை:ஸ்ரீஈஸ்வர் பொறியியல் கல்லுாரி மாணவர்களால் நடத்தப்படும், ஸ்ரீஈஸ்வர் மீடியா கேம்ஸ் என்ற ஊடகவியல் அமைப்பு தொடர்ந்து, 24 மணி நேரம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, கலாம் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.இக்கல்லுாரியின் மீடியா கேம்ஸ் அமைப்பின் இரண்டாம் ஆண்டு விழா, இணைய வழியாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, ஆக., 14 மதியம், 12:00 முதல், ஆக., 15 மதியம் 12:00 மணி வரை தொடர்ந்து, 24 மணி
 24 மணி நேர தொடர் நிகழ்ச்சி: கல்லூரி மாணவர்கள் அசத்தல் 

கோவை:ஸ்ரீஈஸ்வர் பொறியியல் கல்லுாரி மாணவர்களால் நடத்தப்படும், ஸ்ரீஈஸ்வர் மீடியா கேம்ஸ் என்ற ஊடகவியல் அமைப்பு தொடர்ந்து, 24 மணி நேரம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, கலாம் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.இக்கல்லுாரியின் மீடியா கேம்ஸ் அமைப்பின் இரண்டாம் ஆண்டு விழா, இணைய வழியாக கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, ஆக., 14 மதியம், 12:00 முதல், ஆக., 15 மதியம் 12:00 மணி வரை தொடர்ந்து, 24 மணி நேரம் மாணவர்களால், நடனம், பாட்டு, மேடை பேச்சு, குறும்படம் தயாரிக்கும் போட்டி என, பல்வேறு நிகழ்ச்சிகள் இடைவெளியின்றி நடத்தப்பட்டன.கல்லுாரி மாணவர்களுக்கான இணைய வழி நிகழ்ச்சி தொடர்ந்து, 24 மணி நேரம் நடத்தப்படுவது முதன்முறை என்பதால், கலாம் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. மேலும், கோவை சார்ந்த சிறந்த 'யூ டியூப்'பர்களுக்கு, 'மேக்ஸ் 2021' என்ற விருது வழங்கி, கவுரவிக்கப்பட்டது.இதில், கல்லுாரி இயக்குனர் ராஜாராம், கலாம் சாதனை புத்தக பிரதிநிதி சுந்தரேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X