பொது செய்தி

தமிழ்நாடு

கற்பித்தல் பணிக்கு வகுப்பறை தயார்படுத்துங்க!

Added : ஆக 25, 2021
Share
Advertisement
கோவை:அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கற்பித்தல் பணிக்கு உகந்தபடி, வகுப்பறைகளை தயார்படுத்த, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளிகளில், முதல்கட்டமாக, ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்பு துவங்க,தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வளாகத்துக்குள் மேற்கொள்ள வேண்டியமுன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, வழிகாட்டி
 கற்பித்தல் பணிக்கு வகுப்பறை தயார்படுத்துங்க!

கோவை:அடுத்த மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், கற்பித்தல் பணிக்கு உகந்தபடி, வகுப்பறைகளை தயார்படுத்த, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.பள்ளிகளில், முதல்கட்டமாக, ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்பு துவங்க,தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. வளாகத்துக்குள் மேற்கொள்ள வேண்டியமுன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, வழிகாட்டி நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது; பின்பற்றுவதை, கல்வித்துறை அதிகாரிகள் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்ட உள்ளது.கோவை மாவட்டத்தில்,பள்ளிகள் திறப்பது குறித்து, தலைமை ஆசிரியர்களுடன் நேற்று ஆலோசிக்கப்பட்டது; பள்ளி வாரியாக தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் பட்டியல் பெறப்பட்டது. கற்பித்தல் பணி துவங்குவதற்குள் தடுப்பூசி போடாதவர்களுக்கு, கட்டாய விடுப்பு அளிக்க உத்தரவிடப்பட்டது.வளாகங்களை சுத்தம் செய்தல், கழிவறை, குடிநீர் தொட்டி சுத்தமாக பராமரிப்பது, கற்பித்தல் பணிகளுக்கு ஏற்ப இருக்கை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள அறிவுரை வழங்கப்பட்டது. ஆய்வுக்கு அதிகாரிகள் வரும்போது, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, தயார் நிலையில் வகுப்பறைகள் இருப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டது.முதன்மை கல்வி அலுவலர் கீதா கூறுகையில், ''பள்ளி வளாகத்துக்குள் பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, 50 சதவீதமாக பிரித்து, சுழற்சி முறையில் வகுப்பு நடத்த வேண்டும். அதற்கேற்ப கால அட்டவணை தயாரித்துக் கொள்வது அந்தந்த தலைமை ஆசிரியர்கள் பொறுப்பு. கோவை மாவட்டத்தில், 75 சதவீத ஆசிரியர்கள் தடுப்பூசி போட்டுள்ளனர். தடுப்பூசி போடாத ஆசிரியர்கள், நேரடி வகுப்பு துவங்குவதற்குள், செலுத்திக் கொள்ள வேண்டும். மருத்துவ காரணங்கள் ஏற்கப்படும். இதை பின்பற்றாத பட்சத்தில், கட்டாய விடுப்பு அளிக்க, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்,'' என்றார்.ஒரு நாளில் ஓராண்டு மாணவர்கள்!பள்ளிகளை போலவே, கல்லுாரிகளையும், செப்., 1 முதல் திறக்கவும், காலை, மாலை என சுழற்சி முறையில் வகுப்பு நடத்தவும் அரசு அறிவுறுத்தியுள்ளது. கல்லுாரிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகம் என்பதால், சுழற்சி முறையில் வகுப்பு நடத்தினாலும், சமூக இடைவெளி கடைபிடிப்பதில் சிரமம் ஏற்படும் என்கிற கருத்து எழுந்துள்ளது.இதுகுறித்து, தமிழ்நாடு அரசு கல்லுாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் வீரமணி கூறுகையில், ''பல கல்லுாரிகளில் மாணவர்கள் எண்ணிக்கை, 5,000க்கும் அதிகமாக உள்ளன. சுழற்சி முறையில் நடத்தினாலும், சமூக இடைவெளி கடைபிடிப்பதில் சவால் இருக்கும். இதை தவிர்க்க, ஒரு நாள் முதலாமாண்டு, இரண்டாம் நாள் இரண்டாமாண்டு, மற்றொரு நாள் மூன்றாமாண்டு என நடத்தினால், பாதுகாப்பு நடவடிக்கைக்கு எளிதாக இருக்கும். சோதனை முறையில், 'ஒரு நாளில் ஓராண்டு மாணவர்கள்' என்ற அடிப்படையில், வகுப்பு நடத்த வலியுறுத்தியுள்ளோம். ஏற்புடையதாக இருந்தால், பாதுகாப்புடன் தொடரலாம்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X