பொது செய்தி

தமிழ்நாடு

ஒலிம்பிக் வீரர்கள் நினைவு தபால்தலை: பிரதமருக்கு கோவையில் இருந்து ஓர் கடிதம்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
கோவை:'ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற வீரர்களை கவுரவிக்கும் வகையில், நினைவு அஞ்சல் தலை வெளியிட வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, ஓய்வு பெற்ற தபால் ஊழியர் ஹரிஹரன் கடிதம் எழுதியுள்ளார்.கோவைப்புதுாரை சேர்ந்த இவர், ஓய்வு பெற்ற பின்பும், இந்திய தபால் துறைக்கு பல்வேறு ஆலோசனை வழங்கியுள்ளார். அதில், ஆறு ஆலோசனை ஏற்கப்பட்டு, பாராட்டும், ரொக்க விருதும் வழங்கப்பட்டுள்ளன.சமீபத்தில்

கோவை:'ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற வீரர்களை கவுரவிக்கும் வகையில், நினைவு அஞ்சல் தலை வெளியிட வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, ஓய்வு பெற்ற தபால் ஊழியர் ஹரிஹரன் கடிதம் எழுதியுள்ளார்.கோவைப்புதுாரை சேர்ந்த இவர், ஓய்வு பெற்ற பின்பும், இந்திய தபால் துறைக்கு பல்வேறு ஆலோசனை வழங்கியுள்ளார். அதில், ஆறு ஆலோசனை ஏற்கப்பட்டு, பாராட்டும், ரொக்க விருதும் வழங்கப்பட்டுள்ளன.சமீபத்தில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், இந்திய வீரர்கள் ஒரு தங்கம் உட்பட ஏழு பதக்கங்களை வென்றனர். இவ்வீரர்களின் வெற்றியை பாராட்டும் வகையில், நினைவு அஞ்சல் தலை வெளியிட வேண்டும் என, பிரதமர் மோடிக்கு ஹரிஹரன் கடிதம் எழுதியுள்ளார்.அதில், அவர் கூறியிருப்பதாவது:பதக்கம் வென்ற வீரர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிதியுதவி, பல்வேறு தனியார் நிறுவனங்கள் சார்பில் நிதியுதவி, பொருளுதவி உள்ளிட்ட அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்ற ஒலிம்பிக் போட்டியில், நம் வீரர்கள் பெற்ற வெற்றி வரலாற்று சாதனை. காலம் முழுவதும் இவ்வீரர்களின் சாதனையை நினைவு கூறும் வகையில், தபால் துறை சார்பில் நினைவு அஞ்சல் தலை மற்றும் அஞ்சல் அட்டை வெளியிட வேண்டும்.இந்தியா மற்றும் உலகம் முழுவதுமுள்ள அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் இச்சிறப்பு அஞ்சல் தலைகளை சேகரிப்பர். நாடு முழுவதும் நடத்தப்படும் கண்காட்சிகளில் வைக்கப்படும். தொடர்ச்சியாக, அவர்களின் சாதனை நினைவு கூறப்படுவதுடன், இளம் விளையாட்டு வீரர்களுக்கும் இது உத்வேகத்தை அளிக்கும். இதுதொடர்பாக, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளேன். விரைவில் நல்ல பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.இவ்வாறு, ஹரிஹரன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X