பொது செய்தி

தமிழ்நாடு

வேளாண் பல்கலையில் சர்வதேச கருத்தரங்கு

Added : ஆக 25, 2021
Share
Advertisement
கோவை:கோவை வேளாண் பல்கலை பொன்விழா ஆண்டை முன்னிட்டு, இயற்கை வள மேலாண்மை இயக்ககத்தால், 'வேளாண்மையில் இயற்கை வள மேலாண்மை - சாத்தியங்களும், வாய்ப்புகளும்' என்ற தலைப்பில், சர்வதேச கருத்தரங்கு பல்கலை அரங்கில் நடந்தது. பருவ நிலை மாற்றத்தால் மண், நீர், ஆற்றல் ஆகியவற்றை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும், வேளாண் தரவுகள், மண்ணில் கார்பனை நிலை நிறுத்துதல், அங்கக வேளாண்மை, கார்பன்

கோவை:கோவை வேளாண் பல்கலை பொன்விழா ஆண்டை முன்னிட்டு, இயற்கை வள மேலாண்மை இயக்ககத்தால், 'வேளாண்மையில் இயற்கை வள மேலாண்மை - சாத்தியங்களும், வாய்ப்புகளும்' என்ற தலைப்பில், சர்வதேச கருத்தரங்கு பல்கலை அரங்கில் நடந்தது. பருவ நிலை மாற்றத்தால் மண், நீர், ஆற்றல் ஆகியவற்றை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும், வேளாண் தரவுகள், மண்ணில் கார்பனை நிலை நிறுத்துதல், அங்கக வேளாண்மை, கார்பன் பதிவுகள், ஒருங்கிணைந்த அணுகுமுறை என்ற பல்வேறு தலைப்புகளில், வல்லுனர்கள் விளக்கம் அளித்தனர். இதன் முக்கிய பகுதியாக, 2021ம் ஆண்டுக்கான, இயற்கை வள மேலாண்மை உத்திகள் என்ற தலைப்பில், புத்தக தொகுப்பை, துணைவேந்தர் குமார் வெளியிட்டார். இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக இயற்கை வள மேலாண்மை இணை இயக்குனர் சவுத்ரி, இந்திய பொட்டாஷ் நிறுவன முன்னாள் இயக்குனர் ஹிலஸ் மேகன், வேளாண் பல்கலை முன்னாள் துணைவேந்தர்கள் முருகேச பூபதி, ராமசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X