பொது செய்தி

தமிழ்நாடு

விவசாய பண்ணையில் அதிகாரிகள் ஆய்வு

Added : ஆக 25, 2021
Share
Advertisement
கோவை:ஆலாந்துறை பகுதியில், இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகள், விதைச்சான்று மற்றும் அங்கக சான்று கோரி, விண்ணப்பித்திருந்தனர். அவ்விவசாயிகளின் பண்ணைகளில், விதைச்சான்று மற்றும் அங்கக சான்று துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.இயற்கை முறைகளை மட்டும் பின்பற்றி, சாகுபடி செய்யப்படுகிறதா என்பதை கள ஆய்வில் உறுதி செய்தனர். சாகுபடி செய்த முறை குறித்து, அதிகாரிகளின்

கோவை:ஆலாந்துறை பகுதியில், இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகள், விதைச்சான்று மற்றும் அங்கக சான்று கோரி, விண்ணப்பித்திருந்தனர். அவ்விவசாயிகளின் பண்ணைகளில், விதைச்சான்று மற்றும் அங்கக சான்று துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.இயற்கை முறைகளை மட்டும் பின்பற்றி, சாகுபடி செய்யப்படுகிறதா என்பதை கள ஆய்வில் உறுதி செய்தனர். சாகுபடி செய்த முறை குறித்து, அதிகாரிகளின் கேள்விகளுக்கு, விவசாயிகள் விளக்கினர்.பேரூர் விதை சான்று அலுவலர் கூறுகையில், 'இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகள், அதற்கான வழிமுறையை பின்பற்றி சாகுபடி செய்ய வேண்டும். தேர்ச்சி பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே தரச்சான்றிதழ் வழங்கப்படும். அங்ககச் சான்று பெற விருப்பமுள்ள விவசாயிகள், விதைச்சான்று மற்றும் அங்கக விவசாய துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X