பொது செய்தி

தமிழ்நாடு

தூய்மை நகரமாக ஒத்துழைங்க: தொழிலாளர்களுக்கு அறிவுரை

Added : ஆக 25, 2021
Share
Advertisement
கோவை:''ஒவ்வொரும் தங்களுக்கு ஒதுக்கிய பணியை சிறப்பாக மேற்கொண்டால், கோவையை, துாய்மையான மாநகராட்சியாக மாற்ற முடியும்,'' என, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால், துாய்மை பணியாளர்களிடம் தெரிவித்தார்.கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில், மேற்கொள்ளப்படும் சுகாதாரப்பணிகள் குறித்து, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் நேற்று ஆய்வு செய்தார்.ஒண்டிப்புதுாரில்,

கோவை:''ஒவ்வொரும் தங்களுக்கு ஒதுக்கிய பணியை சிறப்பாக மேற்கொண்டால், கோவையை, துாய்மையான மாநகராட்சியாக மாற்ற முடியும்,'' என, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால், துாய்மை பணியாளர்களிடம் தெரிவித்தார்.கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில், மேற்கொள்ளப்படும் சுகாதாரப்பணிகள் குறித்து, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் நேற்று ஆய்வு செய்தார்.ஒண்டிப்புதுாரில், துாய்மை பணியாளர்களின் வருகை பதிவேடுகளை ஆய்வு செய்து அவர், 'நேரம் தவறாமல் பணிக்கு வர வேண்டும். வீடுகளில் குப்பை சேகரிக்கும்போது, மக்கும் மற்றும் மக்காத குப்பையை தரம் பிரித்து சேகரிக்க வேண்டும். கொசுவால் ஏற்படும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; கோவையை துாய்மையான மாநகராட்சியாக திகழ, ஒதுக்கப்பட்ட பணியை சிறப்பாக செய்ய வேண்டும்,' என, துாய்மை பணியாளர்களிடம் தெரிவித்தார்.சவுரிபாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், கர்ப்பிணிகளுக்கான சிகிச்சை, இளம் தாய்மார்களுக்கான சிகிச்சை, தாய் சேய்களுக்கு அளிக்கப்படும் தடுப்பூசி, டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தில் வழங்கப்படும் உதவித்தொகை குறித்த பதிவேடுகளை ஆய்வு செய்தார்.உதவி நகர் நல அலுவலர் வசந்த் திவாகர், செயற்பொறியாளர் ஞானவேல், கிழக்கு மண்டல உதவி கமிஷனர் ரங்கராஜன், மண்டல சுகாதார அலுவலர் முருகா உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X