மத்திய அமைச்சர் நாராயண் ராணேவுக்கு ஜாமின்

Updated : ஆக 25, 2021 | Added : ஆக 25, 2021 | கருத்துகள் (11+ 46)
Share
Advertisement
மும்பை: மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேயை ஓங்கி அறையப் போவதாக பேசியதற்காக, கைது செய்யப்பட்ட பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நாராயண் ராணேவுக்கு ஜாமின் வழங்கப்பட்டது.மஹாராஷ்டிர மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த மக்கள் ஆசி யாத்திரையில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் நாராயண் ராணே பங்கேற்றார். அப்போது,
Narayan Rane, bail , slap Uddhav

மும்பை: மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேயை ஓங்கி அறையப் போவதாக பேசியதற்காக, கைது செய்யப்பட்ட பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய அமைச்சர் நாராயண் ராணேவுக்கு ஜாமின் வழங்கப்பட்டது.

மஹாராஷ்டிர மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த மக்கள் ஆசி யாத்திரையில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் நாராயண் ராணே பங்கேற்றார். அப்போது, 'சுதந்திர தினத்தன்று முதல்வர் உத்தவ் தாக்கரே உரையாற்றினார். நாடு எப்போது சுதந்திரம் பெற்றது, இது எத்தனையாவது சுதந்திர தினம் என்பது கூட அவருக்கு தெரியவில்லை. தனக்கு பின்னால் நின்றவர்களிடம் அவர் கேட்டுள்ளார். அந்த இடத்தில் நான் இருந்திருந்தால் அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்திருப்பேன்' என்று பேசினார்.


latest tamil news


இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பா.ஜ., மற்றும் சிவசேனா கட்சியினர் இடையை பல இடங்களில் நேற்று மோதல் வெடித்தது. இதனை தொடர்ந்து, நாசிக் போலீஸ் கமிஷனர் தீபக் பாண்டேவின் உத்தரவின் பேரில் நாராயண் ராணே கைது செய்யப்பட்டார். நேற்றிரவு மாஜிஸ்திரேட் ஷைக்காபாபாசோ பாட்டீல் முன், ராணேவை போலீசார் ஆஜர்படுத்தினர். விசாரணைக்கு பின், ராணேவுக்கு 'ஜாமின்' வழங்கி, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (11+ 46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mayavan Mayavan - Chennai,இந்தியா
25-ஆக-202114:06:06 IST Report Abuse
Mayavan Mayavan இது என்ன விந்தையான நாடாக இருக்கிறது. சுதந்திரம் அடைந்த நாள் தெரியாத முதல்வரை தண்டிப்பதை விட்டுவிட்டு எடுத்து கண்டித்தவரை தண்டிப்பது.
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஆக-202113:45:20 IST Report Abuse
முக்கண் மைந்தன் அர்னப் கோசாமி தன்னோட டீவீ கோர்ட்ல சங்கிக்கும்பல சேத்துக்கிட்டு தரூர் சாரு குத்தவாளி அப்டீன்னு தெனோந்தெனோம் தீர்ப்பு வாசிச்சான், சுப்ரீம் கோர்ட்டு அவுர நிரபராதின்னு விடுதல பண்ணிடிச்சி
Rate this:
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
25-ஆக-202113:39:43 IST Report Abuse
முக்கண் மைந்தன் 'பிப்டி க்ரோர் கேர்ள் பிரெண்டு ' (fifty crore girlfriend) அப்டீன்னு தரூர் சார நக்கலடிச்சான் ஒத்தென், சுப்ரீம் கோர்ட்டு அவுர நிரபராதின்னு சொல்லி விடுதல பண்ணிடிச்சி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X