பொது செய்தி

தமிழ்நாடு

தேனி நகராட்சிக்கு வரி நிலுவை தொகை ரூ. 22.83 கோடி

Added : ஆக 25, 2021
Share
Advertisement
தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு ரூ.22.83 கோடி வரி நிலுவையால் நிதிநெருக்கடியில் சிக்கி பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க தள்ளாடும் நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் வரிகளை செலுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளது.இது ஒரு லட்சம் மக்கள் க்கும் தேர்வு நிலை நகராட்சியாகும். மாவட்ட தலைநகர் என்பதால் சுகாதாரம், குடிநீர், தெருவிளக்கு பராமரிப்பு உள்ளிட்டவை நாளுக்கு

தேனி : தேனி அல்லிநகரம் நகராட்சிக்கு ரூ.22.83 கோடி வரி நிலுவையால் நிதிநெருக்கடியில் சிக்கி பணியாளர்களுக்கு சம்பளம் வழங்க தள்ளாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுமக்கள் வரிகளை செலுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டுகோள் விடுத்துள்ளது.இது ஒரு லட்சம் மக்கள் க்கும் தேர்வு நிலை நகராட்சியாகும். மாவட்ட தலைநகர் என்பதால் சுகாதாரம், குடிநீர், தெருவிளக்கு பராமரிப்பு உள்ளிட்டவை நாளுக்கு நாள் சிறப்பாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் நகராட்சி நிதி நிலைமை திருப்தியாக இல்லாததால் நிர்வாக சக்கரம் சுழல நிதி ஆதாரம் வலுவாக வேண்டியது அவசியம்.

நகராட்சியின் முக்கிய வருவாயான வீட்டுவரி, குடிநீர் வரி, தொழில் வரி நிலுவை உள்ளது. ஆனால் இரு ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு மக்களின் வாழ்க்கை சூழலை புரட்டி போட்டதால் நகராட்சியும் நிதி ஆதாரத்தில் திண்டாடி வருகிறது.இந்நகராட்சியில் 29,096 வீடுகள், 16,899 வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளன. வீடு, குழாய் வரிகள் நுாறு சதவீதம் வசூல் ஆகாததால் நிதிநெருக்கடியில் தவிக்கிறது. இதனால் 200 ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஜூலை சம்பளம் ரூ.22 லட்சம் நேற்று வரை வழங்க முடியவில்லை..
கடந்த மாதம் வரை ரூ.24 கோடியே 80 லட்சத்து 56 ஆயிரம் வரிநிலுவை இருந்தது. நிர்வாகத்தினர் வீடுதோறும் டிமாண்ட் நோட்டீஸ் வழங்கி வசூலை தீவிரப்படுத்துகின்றனர். ஆனாலும் சில இடங்களில் தொய்வு உள்ளது.ஒரு மாதத்தில் ரூ.ஒரு கோடியே 96லட்சத்து 73 ஆயிரம் வசூல் ஆனது. இன்னும் ரூ.22 கோடியே 83 லட்சத்து 83 ஆயிரம் நிலுவை உள்ளது. இதில் குடிநீர் வரி மட்டும் ரூ.8கோடியே 82 லட்சத்து 14 ஆயிரம் நிலுவை ஆகும். தினமும் தட்டுப்பாடு இன்றி குடிநீர் வழங்கும் போது வரி நிலுவை வைத்திருப்பது வேதனை. எனவே பொதுமக்கள் விரைவில் நிலுவை வரிகளை செலுத்திட முன்வர வேண்டும் என நகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X