சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதியவர் கொலை; வாலிபர் கைது

Added : ஆக 25, 2021
Share
Advertisement
சேவூர் ராமியம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம், 80; கடந்த 22ம் தேதி, நிலத்தகராறு காரணமாக, பக்கத்து வீட்டை சேர்ந்த சந்தோஷ், 28 என்பவர், இவரை கட்டையால் தாக்கி கொலை செய்தார். சேவூர் போலீசார் வழக்கு பதிந்து, சந்தோைஷ தேடி வந்தனர். வீட்டருகே உள்ள தோட்டத்தில் பதுங்கியிருந்த சந்தோைஷ நேற்று போலீசார் கைது செய்தனர். அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.கொலை முயற்சி; 3 பேர்

சேவூர் ராமியம்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம், 80; கடந்த 22ம் தேதி, நிலத்தகராறு காரணமாக, பக்கத்து வீட்டை சேர்ந்த சந்தோஷ், 28 என்பவர், இவரை கட்டையால் தாக்கி கொலை செய்தார். சேவூர் போலீசார் வழக்கு பதிந்து, சந்தோைஷ தேடி வந்தனர். வீட்டருகே உள்ள தோட்டத்தில் பதுங்கியிருந்த சந்தோைஷ நேற்று போலீசார் கைது செய்தனர். அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.கொலை முயற்சி; 3 பேர் கைதுதிண்டுக்கல்லை சேர்ந்தவர் ராஜேஷ், 27. இவரது சகோதரர் அஜித், 25. திருப்பூர் இந்திரா நகரில் தங்கி, பனியன் நிறுவனத்துக்கு வேலை சென்று வருகின்றனர். தேனியை சேர்ந்த செல்வகுமார், 22, தினேஷ், 23, மதுரையை சேர்ந்த வினீத், 23 ஆகியோர் அருகருகே அறையில் தங்கிவந்தனர்.கடந்த 20ம் தேதி இரவு தினேஷின் மொபைல் போன் காணாமல் போனது தொடர்பாக, ராஜேஷிடம் தகராறு செய்தனர். இருதரப்பும் மோதி கொண்டனர். இதில், கம்பி, மரக்கட்டை, கல் ஆகியவற்றால், சகோதரர்களை தாக்கினர். புகாரின் பேரில், செல்வகுமார், தினேஷ், வினீத் மீது கொலை முயற்சி வழக்கு பதிந்து, வடக்கு போலீசார் கைது செய்தனர்.நம்பினார்; நகை போச்சுகாங்கயம் அருகே பொத்திபாளையம், குழந்தைகவுண்டன்வலசை சேர்ந்தவர் ராஜேஸ்வரி, 27. நேற்று வீட்டில் இருந்தபோது, டூவீலரில் வந்த இருவர், நகைக்கு பாலீஷ் செய்து தருவதாக கூறினர். இதை நம்பிய, ராஜேஸ்வரி, நான்கரை சவரன் நகையை கொடுத்தார்.''நகையை ஒரு டிபன் பாக்சில் போட்டு, ரசாயனத்தை ஊற்றி, அடுப்பில் வைத்து சூடு செய்து திறந்து பார்க்க வேண்டும்'' என்று கூறி அறிவுறுத்தி சென்றனர். சிறிது நேரம் கழித்து ராஜேஸ்வரி டிபன் பாக்ஸ் திறந்து பார்த்தார். நகையை காணவில்லை. காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.போலீசிடம் வம்பு; 4 பேர் கைதுகணக்கம்பாளையம் ஊராட்சி, வாஷிங்டன் நகர் காட்டு பகுதியில் இளைஞர்கள் சிலர் மது அருந்தி கொண்டிருந்தனர். அப்பகுதிக்கு ரோந்து சென்ற போலீசார் 'இங்கு மது அருந்தக்கூடாது, வீட்டுக்கு செல்லுங்கள்' என கூறியுள்ளனர். போதை வாலிபர்கள் போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர். நான்கு பேரையும் போலீசார் பெருமாநல்லுார் ஸ்டேஷன் அழைத்து சென்று விசாரித்தனர். இவர்கள் அதே பகுதியை சேர்ந்த சரவணன், 34, மதன்குமார், 29, கதிரவன், 29, செல்லப்பாண்டி, 29, என்பதும், அனைவரும் பனியன் தொழிலாளர்கள் என்பதும் தெரியவந்தது. வழக்குப்பதிவு செய்த போலீசார், நான்கு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இறந்த இருவர் யார்?திருப்பூர், காலேஜ் ரோடு, வஞ்சிபாளையம், கணேஷ் மஹால் அருகே நேற்று முன்தினம், 45 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். நேற்று, 44 வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் அதே இடத்தில், ரயிலில் அடிபட்டு, உடல் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டார். இறந்த இருவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர்கள் என்பது குறித்து, ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.மின்சாரம் தாக்கி முதியவர் பலிபெரியாண்டிபாளையம் நாச்சம்மாள் காலனியை சேர்ந்தவர் சேகர், 62, சிறுபூலுவபட்டி தெய்வீக நகர் பகுதியில் உள்ள ஸ்போர்ட்ஸ் கிளப்பில், பிரின்டிங் வேலை செய்து வந்தார். நேற்று மாலை, வேலை செய்து கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கி பலியானார். பாதுகாப்பு இன்றி, பணியில் ஈடுபட செய்ததாக ஸ்போர்ட்ஸ் கிளப் உரிமையாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர் என, எட்டு பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X