சாரண மாணவன் சாதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சாரண மாணவன் சாதனை

Added : ஆக 25, 2021
Share
சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் சாரண, சாரணியர் இயக்க மாணவர்களுக்கு உடற்பயிற்சி மாவட்ட அளவில் நடத்தப்பட்டது. இதில், வெற்றிபெற்றவர்கள், மண்டல அளவிலும் விளையாடுவர். இதில் தேர்வு செய்யப்படும் நபர், மாநில அளவிலான போட்டிகளிலும் பங்கேற்பர்.திருப்பூர் கிட்ஸ் கிளப் சீனியர் செகண்டரி பள்ளி மாணவன் நிதின் மாநில அளவில் பங்கேற்று முதலிடம் பெற்று அசத்தியுள்ளான். மாநில
 சாரண மாணவன் சாதனை

சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழகத்தில் சாரண, சாரணியர் இயக்க மாணவர்களுக்கு உடற்பயிற்சி மாவட்ட அளவில் நடத்தப்பட்டது. இதில், வெற்றிபெற்றவர்கள், மண்டல அளவிலும் விளையாடுவர். இதில் தேர்வு செய்யப்படும் நபர், மாநில அளவிலான போட்டிகளிலும் பங்கேற்பர்.திருப்பூர் கிட்ஸ் கிளப் சீனியர் செகண்டரி பள்ளி மாணவன் நிதின் மாநில அளவில் பங்கேற்று முதலிடம் பெற்று அசத்தியுள்ளான். மாநில சாரண அலுவலகத்தில் நடந்த சுதந்திர தினவிழாவில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி இதற்கான பரிசையும், பாராட்டு சான்றிதழையும் வழங் கினார். நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்ரமேஷிடம் வாழ்த்து பெற்றார். பள்ளி நிர்வாகம், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாவட்ட சாரண, சாரணிய இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X