ஊராட்சிகளுக்கு தார் டின்கள் வழங்கல் தினமலர் செய்தியால் நடவடிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஊராட்சிகளுக்கு தார் டின்கள் வழங்கல் தினமலர் செய்தியால் நடவடிக்கை

Added : ஆக 25, 2021
Share
பெரியகுளம் : பெரியகுளம் ஒன்றிய அலுவலகத்தில் வெயிலில் கிடந்த தார் டின்கள், தினமலர் செய்தி எதிரொலியாக ஊராட்சிகளுக்கு ரோடு அமைக்க வழங்கப்பட்டது.பெரியகுளம் ஒன்றிய அலுவலகத்திற்கு உட்பட்டு 17 ஊராட்சிகள் உள்ளன. மத்திய, மாநில அரசு ரோடு திட்டங்களுக்கு இங்கிருந்து தார் டின்கள் சப்ளை செய்யப்படும். இதற்காக ஒன்றிய அலுவலகத்தில் 300க்கும் அதிகமான தார் டின்கள் பல மாதங்களாக

பெரியகுளம் : பெரியகுளம் ஒன்றிய அலுவலகத்தில் வெயிலில் கிடந்த தார் டின்கள், தினமலர் செய்தி எதிரொலியாக ஊராட்சிகளுக்கு ரோடு அமைக்க வழங்கப்பட்டது.பெரியகுளம் ஒன்றிய அலுவலகத்திற்கு உட்பட்டு 17 ஊராட்சிகள் உள்ளன. மத்திய, மாநில அரசு ரோடு திட்டங்களுக்கு இங்கிருந்து தார் டின்கள் சப்ளை செய்யப்படும்.

இதற்காக ஒன்றிய அலுவலகத்தில் 300க்கும் அதிகமான தார் டின்கள் பல மாதங்களாக வெயிலில் கிடந்தது.மேல்மங்கலம், ஜெயமங்கலம் ஊராட்சிகளில் உட்கடை கிராமப்பகுதிகளில் தார் ரோடு பணியில் கற்கள் பரப்பியுள்ள நிலையில் தார் கிடைக்காமல் நிறுத்தப்பட்டது. ஒரு தார்டின் எடை 180 கிலோ.ரூ.7500 முதல் ரூ.8 ஆயிரம் வரை விற்பனையாகிறது. வெயிலால் 5 முதல் 8 கிலோ வரை உருகி வெளியேறி வீணானது.தாரின் வேதியியல் தன்மை கெடும் சூழல் உருவானது.இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக தார் டின்களை ஒன்றிய நிர்வாகம், தேவைப்படும் ஊராட்சிகளுக்கு சப்ளை செய்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X