பொது செய்தி

தமிழ்நாடு

'பாசன சபைக்கு டெண்டர் விவரம்'

Added : ஆக 25, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் மாவட்ட அளவிலான, விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நேற்று நடந்தது.கலெக்டர் வினீத் தலைமையில், மாவட்ட அதிகாரிகள் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இருந்தனர். விவசாயிகள், அந்தந்த வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.அலங்கியம் பாசன சபை தலைவர்

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட அளவிலான, விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நேற்று நடந்தது.கலெக்டர் வினீத் தலைமையில், மாவட்ட அதிகாரிகள் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இருந்தனர். விவசாயிகள், அந்தந்த வேளாண் உதவி இயக்குனர் அலுவலகங்களில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.அலங்கியம் பாசன சபை தலைவர் ஈஸ்வரமூர்த்தி:அமராவதி அணை நிரம்பியுள்ளதால், செப்., 15ம் தேதி, தாராபுரம் பழைய, புதிய வாய்க்கால்களில், நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும். குடி மராமத்து திட்டத்தில், பாசன சபைகளே வாய்க்கால் துார்வாரின. தற்போது டெண்டர் விட்டுள்ளதால், பணி விவரத்தை, பாசன சங்கங்களுக்கு முறைப்படி தெரிவிக்க வேண்டும்.மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி:நிலத்தடி நீர் மட்டம் சரிந்து விட்டதால், வேளாண் பொறியியல் துறை சார்பில், நீரூற்று நிபுணரை நியமித்து, ஆழ்குழாய் கிணறு அமைக்க உதவ வேண்டும். மங்கலம் கால்நடை மருந்தகம் மற்றும் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், தேவையான ஊழியர்களை நியமித்து, குடிநீர் வசதியை ஏற்படுத்த வேண்டும்.தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து: வெள்ளகோவில் பி.ஏ.பி., கடைமடை பகுதிகளுக்கு, பாசன தண்ணீர் கிடைப்பதில்லை. சட்டத்தில் உள்ளபடி, கடைமடை பகுதிக்கு, பாசன தண்ணீர் வழங்க வேண்டும். உப்பாறு அணைக்கு, திருமூர்த்தி அணை, அமராவதி அணை உபரிநீரை கொண்டுவர வேண்டும்.உடுமலையில் வெளிநடப்புவிவசாயிகள் குறைகேட்பு கூட்டங்களுக்கு, கலெக்டர் சரியான நேரத்துக்கு வருவதில்லை என்று குற்றம்சாட்டி, உடுமலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் இருந்த விவசாயிகள், வெளிநடப்பு செய்தனர். இதேபோல், குடிமங்கலம், ஊத்துக்குளியிலும் வெளிநடப்பு செய்தனர். தேர்தல் கமிஷன் அவசர ஆலோசனை கூட்டம் இருந்ததால், உரிய நேரத்திற்கு வரமுடியவில்லை என, அதிகாரிகள் சமாதானம் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X