ரேஷன் கடைகளில் நாட்டு சர்க்கரை, பனை வெல்லம் விற்க வேண்டும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடைகளில் நாட்டு சர்க்கரை, பனை வெல்லம் விற்க வேண்டும்

Added : ஆக 25, 2021
Share
பொங்கலுார்:தமிழ்நாடு உழவர்களின் மாபெரும் பேரவை சார்பில், திருப்பூர் மாவட்டம், ஊதியூர் அருகே உள்ள நிழலி கவுண்டம்பாளையத்தில் மாநாடு நடந்தது.தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் முத்து விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாநில துணைச்செயலாளர் பார்த்தசாரதி வரவேற்றார். மாநில தலைவர் சண்முகசுந்தரம், பொருளாளர் ரமேஷ் சிவகுமார் முன்னிலை வகித்தனர்.ரேஷனில்,

பொங்கலுார்:தமிழ்நாடு உழவர்களின் மாபெரும் பேரவை சார்பில், திருப்பூர் மாவட்டம், ஊதியூர் அருகே உள்ள நிழலி கவுண்டம்பாளையத்தில் மாநாடு நடந்தது.தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில பொதுச் செயலாளர் முத்து விஸ்வநாதன் தலைமை வகித்தார். மாநில துணைச்செயலாளர் பார்த்தசாரதி வரவேற்றார். மாநில தலைவர் சண்முகசுந்தரம், பொருளாளர் ரமேஷ் சிவகுமார் முன்னிலை வகித்தனர்.ரேஷனில், தேங்காய் எண்ணெய், நாட்டுச் சர்க்கரை, பனை வெல்லம் வழங்குதல், மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுதல், விருது நகர் முதல் திருப்பூர் வரை உயர்மின் கோபுர திட்டம், கெயில் எரிவாயு குழாய் திட்டப்பணிகளை சாலையோரம் மேற்கொள்ளுதல் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.'தண்ணீர் மனிதர்' எனப்படும் ராஜேந்திர சிங் பேசுகையில், ''விவசாயத்திற்கு தேவைப்படும் தண்ணீர் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு செல்கிறது. பின், அவை மாசுபடுத்தப்பட்ட நீராக வெளியேறுகிறது. நொய்யல், காவிரி, பவானி, அமராவதி என தமிழகத்தில் உள்ள பல ஆறுகள் மரணித்து கொண்டிருக்கின்றன'' என்றார்.பாரதிய கிசான் யூனியன் தலைவர் ராகேஷ் திகாயத் பேசுகையில், ''கெயில், உயர் மின் கோபுரம் உள்ளிட்ட மாவட்ட அளவிலான பிரச்னைகளுக்கு போராட தான் வந்துள்ளோம். கெயில் எரிவாயு குழாயை ரோட்டோரத்தில் கொண்டு செல்ல வேண்டும்,'' என்றார்.டெல்லி போராட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவர் யுத்வீர்சிங், ''வேளாண் சட்டங்களுக்கு எதிராகவும், விலை நிர்ணயத்திற்காகவும் போராடுகிறோம். அக்., 2-ல் கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை விவசாயிகள் பேரணி நடக்கிறது,'' என்றார்.தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் உட்பட விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X