பொது செய்தி

தமிழ்நாடு

திருமுருகன்பூண்டி, இனி நகராட்சி! பொதுமக்கள் மகிழ்ச்சி

Added : ஆக 25, 2021
Share
Advertisement
அவிநாசி;திருமுருகன் பூண்டி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருப்பூர் மாநகராட்சி எல்லையான, தண்ணீர்பந்தலில் இருந்து, ஒரு கி.மீ., துாரத்தில் உள்ளது. திருமுருகன்பூண்டி பேரூராட்சி. கொங்கு ஏழு சிவாலயங்களில் முக்கியத்துவம் பெற்ற, திருமுருநாதர் சுவாமி கோவில், இந்த ஊருக்கு பெருமை சேர்க்கிறது.பனியன் தொழில்
 திருமுருகன்பூண்டி, இனி நகராட்சி! பொதுமக்கள் மகிழ்ச்சி

அவிநாசி;திருமுருகன் பூண்டி பேரூராட்சி, நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருப்பூர் மாநகராட்சி எல்லையான, தண்ணீர்பந்தலில் இருந்து, ஒரு கி.மீ., துாரத்தில் உள்ளது. திருமுருகன்பூண்டி பேரூராட்சி. கொங்கு ஏழு சிவாலயங்களில் முக்கியத்துவம் பெற்ற, திருமுருநாதர் சுவாமி கோவில், இந்த ஊருக்கு பெருமை சேர்க்கிறது.பனியன் தொழில் கோலோச்சும் நகரான திருப்பூருக்கு அருகில் இருப்பதால், திருமுருகன்பூண்டி, அதிவேகமாக வளர்ந்தது. தற்போது, அங்கு, 500க்கும் மேற்பட்ட பனியன் தொழில் சார்ந்த நிறுவனங்கள் மூலம், பல ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர்.இதுதவிர, 100க்கும் மேற்பட்ட சிற்பக்கலை கூடங்கள் உள்ளன. தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கும், இங்கு செதுக்கப்படும் சிலைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.வேலை வாய்ப்பு பெருக, பெருக, பிற மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து இடம் பெயர்ந்து வருவோரின் எண்ணிக்கையும் அதிகரித்தது. ஆங்காங்கே ஏராளமான 'அபார்ட்மென்ட்'கள் முளைத்தன.மக்கள் தொகை 70 ஆயிரம்'நகர்புறத்துக்கு இணையான வளர்ச்சியை பெற்றுவிட்ட திருமுருகன்பூண்டியில், கடந்த, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்புபடி, மக்கள் தொகை, 31 ஆயிரத்து 528; தற்போதைய நிலவரப்படி, 70 ஆயிரத்தை நெருங்கியிருக்கும். 13 ஆயிரத்துக்கும் மேல் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் உள்ளன' என்கின்றனர் பேரூராட்சி நிர்வாகத்தினர்.'வரி மற்றும் பிற வருவாய் இனங்கள் மூலம், ஆண்டுக்கு, 10 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டப்படுகிறது. நகரின் உட்கட்டமைப்பை மேம்படுத்த, நகராட்சியாக மாற்ற வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கை, அரசின் பரிசீலனையில் இருந்தது. நேற்று சட்டசபை கூட்டத்தொடரில், நகராட்சியாக தரம் உயர்த்தி, அறிவிப்பு வெளியானது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.திருமுருகன்பூண்டி 'பயோடேட்டா'

2011ல் மக்கள் தொகை - 31,528தற்போதைய மக்கள் தொகை - ஏறத்தாழ, 70 ஆயிரம்.வீடுகள், வணிக நிறுவனங்கள் - 13 ஆயிரம்வருவாய் - 10 கோடி ரூபாய்தொழில் - சிற்பக்கூடம், பனியன் நிறுவனங்கள்அவிநாசி ஏமாற்றம்

கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை அவிநாசியை விட, திருமுருகன்பூண்டி பின்தங்கிய நிலையில் தான் இருந்தது. ஆனால், திருப்பூர் நகரையொட்டி இருந்ததால், திருமுருகன் பூண்டி அதிவேக வளர்ச்சி பெற்றது. அவிநாசியில், கடந்த, 2011 ஆண்டின் படி, மக்கள் தொகை, 28 ஆயிரத்து 858, தற்போது, 35 ஆயிரத்தை தொட்டிருக்கும்; வீடு, வணிக நிறுவனங்களின் எண்ணிக்கை, 11 ஆயிரத்து 200. வருவாய் இனங்கள் மூலம், ஆண்டுக்கு, 6 கோடி ரூபாய் ஈட்டப்படுகிறது. நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் பட்டியலில், அவிநாசியும் இடம் பெற்றிருந்தது. ஆனால், அறிவிப்பு வெளியாகாததால், மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X