பொது செய்தி

தமிழ்நாடு

பூங்காவை திறக்கலாமே

Added : ஆக 25, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டை : மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் செயல்படாத பூங்காக்களை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், மராமரத்து செய்து பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.தற்போதைய காலகட்டத்தில் மக்கள் பலவித மனச்சோர்வை சந்திக்கின்றனர். இதனால் ரத்த கொதிப்பு, மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் வருகிறது. நேரம் தவறி உண்ணும் போது உடலும் பருமன் ஏற்படுகிறது.

அருப்புக்கோட்டை : மாவட்டம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளின் செயல்படாத பூங்காக்களை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும், மராமரத்து செய்து பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போதைய காலகட்டத்தில் மக்கள் பலவித மனச்சோர்வை சந்திக்கின்றனர். இதனால் ரத்த கொதிப்பு, மன அழுத்தம் உள்ளிட்ட பிரச்னைகள் வருகிறது. நேரம் தவறி உண்ணும் போது உடலும் பருமன் ஏற்படுகிறது. இதனால் மக்கள் காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சி மேற்கொள்கின்றனர். மக்கள் நலன் கருதி அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் பூங்காக்களை அமைத்துள்ளது.

ஆனால் பெருபான்மையான பூங்காக்கள் தற்போது பராமரிப்பு இன்றி புதர்மண்டி காணப்படுகிறது. லட்சக்கணக்கில் செலவழித்து கட்டப்பட்ட பூங்காக்கள் பயன்பாட்டிற்கு வராமலேயே வீணாகி வருகிறது. இதனால் மக்கள் பாதுகாப்பாக நடை பயிற்சி செய்ய முடியவில்லை. நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோடு, ரயில்வே ஸ்டேஷன் பகுதிகளில் நடைபயிற்சி செய்கின்றனர். ரோடு ஓரங்களில் நடக்கும் போது, விபத்துக்கள், தனியாக நடக்கும் போது வழிப்பறி கொள்ளையர்கள் ஆபத்து போன்ற பிரச்னைகளையும் சந்திக்கின்றனர்.நகராட்சிகள், பேரூராட்சிகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகள் பராமரித்து முழுமையாக பயன்பட நடவடிக்கை வேண்டும்.

பூட்டிக் கிடக்கும் பூங்காக்களை மராமத்து பணி செய்து திறந்து விட வேண்டும்.பூங்காக்களை அடிக்கடி பராமரிக்க வேண்டும்பல ஊர்களில் பூங்காக்கள் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆகியும் மக்களின் பயன்பாட்டிற்கு வராமலே உள்ளது. பூங்காக்களை அடிக்கடி பராமரிப்பு செய்தும், அதற்கென ஊழியர்களை நியமிக்கவும் வேண்டும். லட்சக் கணக்கான நிதியில் கட்டப்பட்ட பூங்காக்கள் பயன்பாட்டிற்கு வராததால் புதர்மண்டி, சேதமடைந்து காணப்படுகிறது.மோகன்வேல், சமூக ஆர்வலர், அருப்புக்கோட்டை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X