பொது செய்தி

தமிழ்நாடு

கோபியர் கொஞ்சும் ரமணா... கோபால கிருஷ்ணா!

Added : ஆக 25, 2021
Share
Advertisement
திருப்பூர்:ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, கண்ணை கவரும் வகையிலான, கண்ணன் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.ஆவணி மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியில், கோகுலாஷ்டமி(ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி) கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண அவதாரத்தில், கம்சனை கொல்ல, கிருஷ்ணர் அவதரித்த நாளை, பக்தர்கள் கொண்டாடுகின்றனர்.இந்தாண்டு வரும், 30ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. திருப்பூர்
 கோபியர் கொஞ்சும் ரமணா... கோபால கிருஷ்ணா!

திருப்பூர்:ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, கண்ணை கவரும் வகையிலான, கண்ணன் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன.ஆவணி மாதம் வரும் தேய்பிறை அஷ்டமியில், கோகுலாஷ்டமி(ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி) கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண அவதாரத்தில், கம்சனை கொல்ல, கிருஷ்ணர் அவதரித்த நாளை, பக்தர்கள் கொண்டாடுகின்றனர்.இந்தாண்டு வரும், 30ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. திருப்பூர் நகரப்பகுதியில் வசிக்கும் மக்கள், கிருஷ்ணர் சிலையை கொலு வைத்து, நைவேத்யங்கள் படைத்து வழிபடுகின்றனர். வீடுகளில், கிருஷ்ண ஜெயந்தி கொலு வைத்து, விரதம் இருந்து, கூட்டுபஜனையுடன் வழிபாட்டை பூர்த்தி செய்கின்றனர்.இதையொட்டி, கடைகளில் அழகிய கண்ணன் சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. பக்தர்கள் விரும்பி வாங்கி செல்லும் வகையில், 50 ரூபாய் முதல், கண்ணை கவரும் கிருஷ்ணர் சிலைகள் விற்கப்படுவதாக, வியாபாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X