பொது செய்தி

தமிழ்நாடு

'தினமலர்' செய்தி எதிரொலி :உரக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

Added : ஆக 25, 2021
Share
Advertisement
ஆனைமலை;பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில், வேளாண் குழுவினர் போலி உரம் மற்றும் பூச்சிக்கொல்லி விற்பனையை கண்டறிய ஆய்வு மேற்கொண்டனர்.பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில், போலி பூச்சிக்கொல்லி, உரங்களை விற்பனை செய்யப்படுவது குறித்து, 'தினமலர்' நாளிதழில், நேற்று முன்தினம் செய்தி வெளியிடப்பட்டது.இதையடுத்து, நேற்று முன்தினம், கோவை வேளாண் தரக்கட்டுப்பாடு உதவி
  'தினமலர்' செய்தி எதிரொலி :உரக்கடைகளில் அதிகாரிகள் ஆய்வு

ஆனைமலை;பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில், வேளாண் குழுவினர் போலி உரம் மற்றும் பூச்சிக்கொல்லி விற்பனையை கண்டறிய ஆய்வு மேற்கொண்டனர்.பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதிகளில், போலி பூச்சிக்கொல்லி, உரங்களை விற்பனை செய்யப்படுவது குறித்து, 'தினமலர்' நாளிதழில், நேற்று முன்தினம் செய்தி வெளியிடப்பட்டது.இதையடுத்து, நேற்று முன்தினம், கோவை வேளாண் தரக்கட்டுப்பாடு உதவி இயக்குனர் புனிதா, வேளாண் அலுவலர் சக்திவேல் தலைமையில், நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டு, பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, கிணத்துக்கடவு மற்றும் ஆனைமலை ஒன்றியங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.ஆனைமலை, திவான்சாபுதுார், சேத்துமடை, நடுப்புணி, ஜமீன் ஊத்துக்குளி பகுதிகளில் ஆய்வு நடந்தது. 32க்கும் மேற்பட்ட தனியார் உரக்கடைகளில், தரமான மற்றும் உரிமம் பெற்ற உரம், பூச்சிக்கொல்லிகள் விற்பனை செய்யப்படுகிறதா என விசாரித்தனர்.மேலும், 24 விவசாயிகளின் தோப்புகளுக்குச் சென்று போலி உரம் விற்பனை செய்யப்படுகிறதா என கேட்டறிந்தனர். போலி உரம் விற்பனை செய்வோர் குறித்த தகவல் தெரிவிக்க, 'வாட்ஸ் ஆப்' குழு துவங்கி, விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.வேளாண்துறையினர் கூறியதாவது:உரக்கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில், போலி மற்றும் காலாவதியான உரம், பூச்சிக்கொல்லி விற்பனை குறித்து விசாரணை நடந்தது. அடிக்கடி 'ரெய்டு' நடத்தப்படும்.தோட்டங்களில் போலியான உரம், பூச்சிக்கொல்லி விற்பனை செய்யும் முகவர்களிடம், விவசாயிகள் ஏமாற வேண்டாம். போலி மற்றும் காலாவதியான உரம் விற்பனை செய்யும் கடைக்காரர்கள் குறித்து விவசாயிகள் தகவல் தெரிவித்தால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X