பொது செய்தி

தமிழ்நாடு

ஆனைமலை புலிகள் காப்பகம்: துணை இயக்குனர் பொறுப்பேற்பு

Added : ஆக 25, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர் அன்வர்தீன், சென்னை கூடுதல் தலைமை வன பாதுகாவலராகவும் (திட்டக்குழு), பொள்ளாச்சி வனக்கோட்டம் துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர், திருச்சி மரக்கிடங்கு பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கும் பணிமாற்றம் செய்யப்பட்டனர்.மேலும், ஆனைமலை புலிகள் காப்பக தலைமையிடத்து உதவி வன பாதுகாவலர் (பயிற்சி) பிரசாந்த், சென்னை
 ஆனைமலை புலிகள் காப்பகம்: துணை இயக்குனர் பொறுப்பேற்பு

பொள்ளாச்சி:ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனர் அன்வர்தீன், சென்னை கூடுதல் தலைமை வன பாதுகாவலராகவும் (திட்டக்குழு), பொள்ளாச்சி வனக்கோட்டம் துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர், திருச்சி மரக்கிடங்கு பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கும் பணிமாற்றம் செய்யப்பட்டனர்.மேலும், ஆனைமலை புலிகள் காப்பக தலைமையிடத்து உதவி வன பாதுகாவலர் (பயிற்சி) பிரசாந்த், சென்னை வனவிலங்கு வார்டனாக பணி மாற்றம் செய்யப்பட்டார். திருநெல்வேலி களக்காடு முண்டந்துறையில் சூழல் மேம்பாட்டு அலுவலராக பணியாற்றிய கணேசன், பணிமாறுதல் பெற்று, பொள்ளாச்சி வனக்கோட்ட துணை இயக்குனராக பொறுப்பேற்றுக்கொண்டார்.பணிமாறுதல் பெற்றவர்களுக்கு பாராட்டு விழாவும்; புதியதாக பொறுப்பேற்றுள்ள துணை இயக்குனருக்கு வரவேற்பு அளிக்கும் விதமாக, ஆனைமலை புலிகள் காப்பக அலுவலகத்தில் விழா நடந்தது. அதில், உதவி வன பாதுகாவலர்கள், பொள்ளாச்சி, திருப்பூர் கோட்ட வனச்சரகர்கள் பங்கேற்றனர். சிறப்பாக பணியாற்றிய அலுவலக பணியாளர்கள், களப்பணியாளர்கள் தன்னார்வலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள், கேடயம் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X