பொது செய்தி

தமிழ்நாடு

திருச்செந்தூர் பயணியர் ரயில்: கேரள பயணிகள் வலியுறுத்தல்

Added : ஆக 25, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:கேரள மாநிலம், பாலக்காடு ரயில் பயணிகள் நலச் சங்க தலைவர் முருகன், தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு மனு அனுப்பியுள்ளார். அதில், கூறியிருப்பதாவது:கேரளா - தமிழகம் இடையே, பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இரு மாநிலங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, பாலக்காட்டில் இருந்து, பொள்ளாச்சி வழித்தடத்தில் தமிழகத்தின்

பொள்ளாச்சி:கேரள மாநிலம், பாலக்காடு ரயில் பயணிகள் நலச் சங்க தலைவர் முருகன், தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு மனு அனுப்பியுள்ளார். அதில், கூறியிருப்பதாவது:கேரளா - தமிழகம் இடையே, பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இரு மாநிலங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, பாலக்காட்டில் இருந்து, பொள்ளாச்சி வழித்தடத்தில் தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு செல்ல இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மட்டுமே இயங்குகின்றன.இவை, அனைத்து ஸ்டேஷன்களிலும் நிற்பதில்லை; கட்டணமும் அதிகம். எனவே, இரு மாநில பொதுமக்களும் பயனடையும் வகையில், பொள்ளாச்சி வழித்தடத்தில் கொரோனா முதல் அலைக்கு முன் இயங்கிய, பாலக்காடு - திருச்செந்துார் பயணியர் ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். சென்னை - பாலக்காடு எக்ஸ்பிரஸ், கொல்லங்கோட்டில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X