வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் சந்தன மரக்கன்று நடவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் சந்தன மரக்கன்று நடவு

Added : ஆக 25, 2021
Share
உடுமலை;உடுமலை பகுதிகளில், வனத்துக்குள் திருப்பூர்-7 திட்டத்தின் கீழ், விவசாய நிலங்கள், தொழிற்சாலை, கோழிப்பண்ணை வளாகங்கள் மற்றும் ஊராட்சிகளுக்கு சொந்தமான பொது இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.விவசாய நிலங்களில், வருவாய் அளிக்கும் மரச்சாகுபடி திட்டமாக, மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக, மரச்சாமான்கள், காகித உற்பத்தி என
 வனத்துக்குள் திருப்பூர் திட்டத்தில் சந்தன மரக்கன்று நடவு

உடுமலை;உடுமலை பகுதிகளில், வனத்துக்குள் திருப்பூர்-7 திட்டத்தின் கீழ், விவசாய நிலங்கள், தொழிற்சாலை, கோழிப்பண்ணை வளாகங்கள் மற்றும் ஊராட்சிகளுக்கு சொந்தமான பொது இடங்களில் மரக்கன்றுகள் நடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.விவசாய நிலங்களில், வருவாய் அளிக்கும் மரச்சாகுபடி திட்டமாக, மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக, மரச்சாமான்கள், காகித உற்பத்தி என மரத்தேவைகளுக்கு, வனங்கள் அழிக்கப்படுவது தடுக்கப்படுதோடு, பசுமை பரப்பும் அதிகரிக்கும் வகையில், விவசாய நிலங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகிறது.நேற்று, உடுமலை அருகேயுள்ள துங்காவியில், விவசாயி செல்வராஜூக்கு சொந்தமான நிலத்தில், 500 செம்மரக்கன்றுகள் மற்றும் 200 சந்தன மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டது.இத்திட்டத்தின் கீழ், மரக்கன்றுகள் நடவு செய்து பராமரிக்க விருப்பம் உள்ளவர்கள், 90474 56666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என திட்டக்குழுவினர் தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X