பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சியாக தரம் உயருது சிவகாசி வளர்ச்சி பணிகள் மேம்பட வாய்ப்பு

Added : ஆக 25, 2021
Share
Advertisement
சிவகாசி : சிவகாசி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக சட்டசபையில் அமைச்சர் நேரு அறிவித்தார். இது அம்மக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சிவகாசி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வணிகர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.இதை தொடர்ந்து திருத்தங்கலில் நடந்த எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் பங்கேற்ற அப்போதைய முதல்வர் பழனிசாமி, சிவகாசியை

சிவகாசி : சிவகாசி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுவதாக சட்டசபையில் அமைச்சர் நேரு அறிவித்தார். இது அம்மக்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சிவகாசி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வணிகர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதை தொடர்ந்து திருத்தங்கலில் நடந்த எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில் பங்கேற்ற அப்போதைய முதல்வர் பழனிசாமி, சிவகாசியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்திருந்தார். இதற்கான பணிகளும் துவங்கப்பட்டது.இதற்காக இந்தாண்டு பிப்ரவரியில் முதற்கட்டமாக சிவகாசியுடன் திருத்தங்கல் நகராட்சியை இணைக்க அரசாணை வெளியிடப்பட்டது.

இந்நிலையில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தற்காலிகமாக இந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின் நேற்று சட்டசபையில் அமைச்சர் நேரு சிவகாசியை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார்.சிவகாசி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தும் நோக்கில் சிவகாசி, திருத்தங்கல், சிவகாசி ஒன்றிய பகுதியில் உள்ள தேவர்குளம், சாமிநத்தம், செங்கமலநாச்சியார்புரம், ஆனையூர், சித்துராஜபுரம், விஸ்வநத்தம், அனுப்பன்குளம், பள்ளபட்டி, நாரணாபுரம் ஆகிய முதல் நிலைய ஊராட்சிகளை சிவகாசி மாநகராட்சியுடன் இணைக்க அ.தி.மு.க., ஆட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் முதற்கட்டமாக திருத்தங்கல் நகராட்சியை சிவகாசி நகராட்சியுடன் இணைக்கும் பணிக்கு நகராட்சி கமிஷனர் அனுமதி வழங்கி இருந்தார்.சிவகாசி நகராட்சியில் உள்ள 33 வார்டுகளையும், திருத்தங்கல் நகராட்சியில் உள்ள 21 வார்டுகளையும் இணைக்க நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநரும் மார்ச்சில் பரிந்துரை செய்தார். திருத்தங்கல் நகராட்சி 13 ச.கி.மீட்டர் பரப்பளவு கொண்டது.தற்போது 60 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.

மொத்த ஆண்டு வருவாய் ரூ.12 கோடியாகும். சிவகாசி 6.89 ச.கி.மீட்டர் பரப்பளவு கொண்டது. மொத்த ஆண்டு வருவாய் ரூ.28 கோடி. இந்த இரண்டு நகராட்சிகளையும் இணைப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.40 கோடி வருவாய் கிடைக்கும்.திருத்தங்கல் நகராட்சியை சிவகாசி நகராட்சியுடன் இணைக்க வார்டு எல்லைகள் வரையறுக்கும் பணிகளும் தொடங்கப்பட்டன.இதுகுறித்த அரசின் உத்தரவு மாவட்ட கலெக்டர், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர், சிவகாசி நகராட்சி கமிஷனருக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில்தான் ஆட்சி மாற்றத்தால் திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் சிவகாசி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த நேற்று அறிவிப்பு வெளியானது சிவகாசி மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.தொழில் நகரமான சிவகாசி மாநகராட்சியாகும் பட்சத்தில் பல்வேறு வளர்ச்சி பணிகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் மேம்படும். குடிநீர் பிரச்னை இருக்காது, சாக்கடை, குப்பை என அனைத்து அடிப்படை பிரச்னைகளுக்கும் உடனடி தீர்வு கிடைக்கும்.

அதிகளவில் நிதி ஒதுக்கப்பட்டு வளர்ச்சி பணிகள் தீவிரமடையும். மேலும் பட்டாசு, அச்சு, தீப்பெட்டி தொழில்கள் மேலும் வளர்ச்சியடையும்.வசதிகள் முழுமையடையும்மல்லிகா, குடும்ப தலைவி, பாரைப்பட்டி, சிவகாசி: நாங்கள் வசிப்பது கிராம பகுதி. இதனால் இப்பகுதியில் சில அடிப்படை வசதிகளில் சிரமம் உள்ளது. சிவகாசி மாநகராட்சியாகும் போது எங்கள் பகுதியும் இணைந்து விடும்.

இதனால் எங்கள் பகுதியில் ரோடு, சாக்கடை, குடிநீர், தெருவிளக்கு வசதி அனைத்தும் முழுமையடைந்து விடும்.வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்கப்படுகின்ற நிதிகள் எங்களுக்கும் கிடைக்கும்.உட்கட்டமைப்பு வசதிகள் பெருகும்ஆத்தீஸ்வரன், அச்சக தொழிலதிபர், சிவகாசி:நகரின் முக்கிய பிரச்னையாக சாக்கடை உள்ளது. மாநாகராட்சியாகும் பட்சத்தில் நிரந்தர தீர்வு கிடைக்கும். பாதாளசாக்கடை அமைக்க திட்டமிட்டிருந்தாலும் செயல்படுத்த வாய்ப்பில்லாமலே இருந்தது. இந்நிலையில் இதற்கும் ஒரு வழி பிறக்கும். நகரின் உட்கட்டமைப்பு வசதிகள் பெருகும். பிறநகரங்களில் இருந்து வணிகர்கள் வந்து செல்வதால் நகர வர்த்தகம் இன்னும் மேம்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X