விளம்பர பலகை விதிமீறல்! கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் :கூட்டாய்வு செய்து அகற்ற முன்வருமா?

Added : ஆக 25, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி, உடுமலை பகுதியில், போக்குவரத்துக்கு இடையூறாகவும், வாகன ஓட்டுனர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில், விதிமீறி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ரோட்டோரங்களில் விளம்பரப் பலகைகள் வைப்பதற்கு, ஐகோர்ட் தடை விதித்துள்ளது. இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.தேசிய நெடுஞ்சாலைத்துறை, மாநில
 விளம்பர பலகை விதிமீறல்! கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம் :கூட்டாய்வு செய்து அகற்ற முன்வருமா?

பொள்ளாச்சி, உடுமலை பகுதியில், போக்குவரத்துக்கு இடையூறாகவும், வாகன ஓட்டுனர்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில், விதிமீறி வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளை அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ரோட்டோரங்களில் விளம்பரப் பலகைகள் வைப்பதற்கு, ஐகோர்ட் தடை விதித்துள்ளது. இந்த வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.தேசிய நெடுஞ்சாலைத்துறை, மாநில நெடுஞ்சாலைத்துறை இடங்களில், விளம்பரப் பலகைகள் வைக்க அனுமதியில்லை என்று, அந்தந்த துறையினர் தெரிவித்துள்ளனர்.தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலங்களில், விளம்பரப்பலகை வைக்க வேண்டுமானால், ரோட்டின் எல்லையில் இருந்து, குறைந்தபட்சம் 10 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறாகவோ, வாகன ஓட்டுனர்களின் கவனத்தை சிதறடிக்கும் வகையிலோ இடம் பெறக்கூடாது என்ற விதிமுறை கடைபிடிக்கப்படுகிறது. இதற்கு, மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்குகிறது.பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில், தேசிய, மாநில நெடுஞ்சாலை துறையின் ரோடுகளில், ஜவுளிக்கடை, நகைக்கடை, வீட்டு உபயோக பொருட்கள், கட்டுமான பொருட்கள், கல்வி நிறுவனங்களின் விளம்பரங்கள் வைக்கப்படுகின்றன. அவ்வப்போது, அரசியல் கட்சியினர் போட்டி போட்டுக்கொண்டு, பிரம்மாண்ட பிளக்ஸ் பேனர்கள், கட்அவுட்கள் வைக்கும் கலாசாரம் தொடர்கதையாகியுள்ளது.வேகதடை, முக்கிய ரோடுகள் சந்திப்பு, திருப்பங்கள் உள்ளிட்ட, வாகன ஓட்டுனர்கள் கவனமாக இருக்க வேண்டிய இடங்களிலும், தனியார் இடத்திலும் அத்துமீறி விளம்பர பலகை வைக்கப்படுகிறது.தனியார் கட்டடத்தின் மாடி பகுதியில், இரும்பு ஆங்கிளில் விளம்பர பலகைகள் பொருத்தப்பட்டுள்ளன. பொள்ளாச்சியில், ரோட்டோர மின்கம்பங்கள், விளம்பர பலகை தொங்க விடும் இடமாக மாறியுள்ளது. அவை காற்றில் அசைந்து விபத்துக்கு அச்சாரமிடுகின்றன.அனுமதியற்ற மற்றும் விதிமுறைகளுக்கு முரணாக அமைக்கப்பட்ட விளம்பர பலகைகளை அகற்றும் அதிகாரம், நகராட்சி மற்றும் ஊராட்சி அமைப்புகளுக்கு உள்ளது. ஆனால், விதிமீறல் விளம்பரங்கள் எதுவும் இதுவரை அகற்றப்படவில்லை. நிர்வாகத்தில் இருக்கும் சில அதிகாரிகள் கை நீட்டுவதே இதற்கு காரணமாகும்.உடுமலைஉடுமலை பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாண்ட், தளி ரோடு என மக்கள் அதிகம் கூடும் பகுதிகள் மற்றும் ரோடு சந்திப்புகளில், அரசியல் கட்சிகள், வணிக நிறுவனங்கள் சார்பில், பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.இதனால், வாகன ஓட்டிகளுக்கு கவனச்சிதறல் ஏற்படுவதோடு, ரோடு சந்திப்புகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல் விபத்து ஏற்படுகிறது. மேலும், பல மாதமாக அகற்றப்படாமல், எந்நேரமும் விழும் நிலையில் உள்ள பிளக்ஸ் பேனர்கள், பலத்த காற்று மற்றும் கனமழைக்கு தாங்காமல், மக்கள் மீது விழுந்து உயிரிழப்புகளை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.மடத்துக்குளத்தில் முக்கிய சந்திப்பான நால்ரோடு பகுதியில், போக்குவரத்திற்கு இடையூறாக பிளக்ஸ்கள் அமைக்கப்படுகின்றன. கடந்த மாதம், காற்றுக்குதாக்குப்பிடிக்காமல் பல இடங்களில் பிளக்ஸ்பேனர்கள் சரிந்து, விபத்து ஏற்பட்டும், விதிமீறிய பேனர்களை அகற்ற வேண்டிய, திருப்பூர் மாவட்ட நிர்வாகம், உடுமலை நகராட்சி மற்றும் போலீசார் அலட்சியமாக உள்ளனர்.அதிகாரிகள் ஆய்வு செய்து அகற்ற வேண்டும்!சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:விளம்பர பலகை வைக்க, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு, கட்டணம் செலுத்த வேண்டும்.ஆனால், பொள்ளாச்சி, உடுமலை பகுதியில் உள்ள விளம்பர பலகைகள், முறையான அனுமதி பெற்று வைத்துள்ளனரா என அதிகாரிகள் ஆய்வு செய்வதில்லை. மாவட்ட நிர்வாகம், இதற்கென குழு அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். அனுமதி பெறாமலும், விதிமுறைகளுக்கு முரணாகவும் வைத்துள்ள விளம்பர பலகைகளை பாரபட்சமின்றி அப்புறப்படுத்த வேண்டும்.தனியார் கட்டடங்கள், சுவர்கள், காலி இடங்களில் விளம்பரம் வைத்தால், வர்த்தக ரீதியாக கணக்கெடுத்து, அதற்கான வரி விதிக்க வேண்டும். விளம்பர பலகை அக்கிரமித்து, அத்துமீறலை கட்டுப்படுத்தாவிட்டால், விரும்பத்தகாத அசம்பாவிதங்கள் ஏற்படும். இதை உணர்ந்து, அரசும், அதிகாரிகள் இப்பிரச்னையில் கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்- நிருபர் குழு -.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X