போலீஸ் ஸ்டேஷனில் வீணாகும் வாகனங்கள்| Dinamalar

போலீஸ் ஸ்டேஷனில் வீணாகும் வாகனங்கள்

Added : ஆக 25, 2021
Share
உடுமலை:போலீஸ் ஸ்டேஷனில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், பாதுகாப்பு இன்றி, வெயிலிலும், மழையில் நனைந்தும் வீணாகி வருகிறது.உடுமலை போலீஸ் ஸ்டேஷனில், விபத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், லாரி உள்ளிட்டவை, குட்டை திடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மேலும், போதையில் வாகனம் ஓட்டுதல், ெஹல்மெட் அணியாத நபர்களிடம்
 போலீஸ் ஸ்டேஷனில்  வீணாகும் வாகனங்கள்

உடுமலை:போலீஸ் ஸ்டேஷனில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள், பாதுகாப்பு இன்றி, வெயிலிலும், மழையில் நனைந்தும் வீணாகி வருகிறது.உடுமலை போலீஸ் ஸ்டேஷனில், விபத்து உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய, இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள், லாரி உள்ளிட்டவை, குட்டை திடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.மேலும், போதையில் வாகனம் ஓட்டுதல், ெஹல்மெட் அணியாத நபர்களிடம் பறிமுதல் செய்த வாகனங்களும் ஏராளமாக உள்ளன. இவற்றை முறையாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்காமல் உள்ளது. இந்த வாகனங்கள் குறித்து கணக்கெடுத்து உடனடியாக ஒப்படைக்க, திருப்பூர் எஸ்.பி., அறிவுறுத்தியிருந்தார்.நீதிமன்ற வழக்கு தொடர்புடைய வாகனங்கள், அபராதம் விதித்து ஒப்படைக்க வேண்டிய வாகனங்கள் குறித்து கடந்த மாதம் போலீசார் கணக்கெடுத்தனர். ஆனால், அவற்றை ஒப்படைக்கவில்லை. இவ்வாறு, உடுமலை போலீஸ் ஸ்டேஷன் பகுதிகளில், ஏராளமான வாகனங்கள் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைத்தும் வீணாகி வருகிறது. பாதுகாப்பற்ற முறையில் உள்ள வாகனங்களை, உரியவர்களிடம் ஒப்படைக்கவும், நீதிமன்ற வழக்கு தொடர்புடைய வாகனங்களை பாதுகாக்கவும், மற்றவாகனங்களை உரிய வழிமுறைப்படி, ஏலம் விடவும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X