ரேஷன் பொருள் வினியோகத்தில் குளறுபடி: சிறப்பு முகாம் நடத்த கோரிக்கை

Added : ஆக 25, 2021
Share
Advertisement
உடுமலை;ரேஷன் வினியோக குளறுபடிகளுக்கு, தீர்வு கிடைக்கும் வகையில், உள்வட்டம் வாரியாக, சிறப்பு குறை தீர் முகாம் நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.உடுமலை தாலுகாவில், ஒரு லட்சத்து, 2 ஆயிரத்து, 161 ரேஷன் கார்டுகளுக்கு, 183 ரேஷன் கடைகள் வாயிலாக பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது.ரேஷன் கடைகளில், தற்போது, பொருட்கள் பெற, பயோமெட்ரிக்., பதிவு முறை பின்பற்றப்படுகிறது; ரேஷன்கார்டுதாரர்களின்

உடுமலை;ரேஷன் வினியோக குளறுபடிகளுக்கு, தீர்வு கிடைக்கும் வகையில், உள்வட்டம் வாரியாக, சிறப்பு குறை தீர் முகாம் நடத்த வலியுறுத்தப்பட்டுள்ளது.உடுமலை தாலுகாவில், ஒரு லட்சத்து, 2 ஆயிரத்து, 161 ரேஷன் கார்டுகளுக்கு, 183 ரேஷன் கடைகள் வாயிலாக பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது.ரேஷன் கடைகளில், தற்போது, பொருட்கள் பெற, பயோமெட்ரிக்., பதிவு முறை பின்பற்றப்படுகிறது; ரேஷன்கார்டுதாரர்களின் மொபைல் எண்ணுக்கு, பெறப்பட்ட விபரங்கள் குறித்த, குறுந்தகவலும் அனுப்பப்படுகிறது.

இந்நிலையில், பெரும்பாலான கடைகளில், பயோமெட்ரிக்., பதிவின் போது, 'ரேகை சரியாக விழவில்லை; நெட்வொர்க் பிரச்னை,' உட்பட காரணங்கள் தெரிவிக்கப்பட்டு, பொருட்கள் வினியோகத்தில், தாமதம் ஏற்படுத்தப்படுகிறது. பெரும்பாலும் முதியவர்கள், இப்பிரச்னையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.பல முறை கடைக்கு அலைக்கழிக்கப்பட்டு, குறித்த நேரத்தில், பொருட்கள் வாங்க முடியாமல், திரும்பும் நிலை உள்ளது. இத்தகைய பிரச்னைகளின் போது, தாலுகா அலுவலகத்துக்குச்சென்று, பதிவில் நிலவும் பிரச்னை குறித்து புகார் மனு அளிக்குமாறு, பணியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.பெருந்தொற்று மற்றும் கிராமப்புறங்களில் இருந்து உடுமலைக்குச்சென்று, மனு அளிக்க முடியாமல், முதியவர்கள் தவிக்கின்றனர். இதே போல், கடைகளில் வாங்கும் பொருட்களுக்கும், மொபைல் எண்ணுக்கு வரும் குறுந்தகவலில், உள்ள விபரங்களிலும், அதிக வித்தியாசம் உள்ளதாக அதிக புகார்கள் எழுந்து வருகின்றன.

இப்பிரச்னைகளுக்கு தீர்வாக, 'வருவாய் உள்வட்டம் வாரியாக, குறை தீர் முகாம் நடத்தினால், அனைத்து தரப்பினரும் பயன்பெறுவார்கள்; ரேஷன் வினியோகத்தில் உள்ள குளறுபடிகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கலாம்,' என மக்கள் வலியுறுத்துகின்றனர்.இது குறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கும் கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X