பொது செய்தி

தமிழ்நாடு

களையெடுப்புக்கு ஆடு கிடை விவசாயிகள் புது 'டெக்னிக்'

Added : ஆக 25, 2021
Share
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சி தென்னை விவசாயிகள், தோப்பில் ஆட்டு மந்தைகளை மேய விட்டு, களையை அழிக்கும் முறையை பின்பற்ற துவங்கியுள்ளனர்.ஆட்டுமந்தையை ஓட்டி வந்து, விளை நிலத்தில் கிடை போட்டு, அதன் வாயிலாக கிடைக்கும் ஆட்டு எரு மற்றும் சிறுநீரால் மண் வளத்தை மேம்படுத்துவது, பாரம்பரியமாக கடைபிடிக்கப்படுகிறது.பொதுவாக, ஆட்டுக்கிடைகள் நெல் வயல், தோட்டக்கலை பயிர்கள் பயிரிடும்
 களையெடுப்புக்கு ஆடு கிடை விவசாயிகள் புது 'டெக்னிக்'

பொள்ளாச்சி:பொள்ளாச்சி தென்னை விவசாயிகள், தோப்பில் ஆட்டு மந்தைகளை மேய விட்டு, களையை அழிக்கும் முறையை பின்பற்ற துவங்கியுள்ளனர்.ஆட்டுமந்தையை ஓட்டி வந்து, விளை நிலத்தில் கிடை போட்டு, அதன் வாயிலாக கிடைக்கும் ஆட்டு எரு மற்றும் சிறுநீரால் மண் வளத்தை மேம்படுத்துவது, பாரம்பரியமாக கடைபிடிக்கப்படுகிறது.பொதுவாக, ஆட்டுக்கிடைகள் நெல் வயல், தோட்டக்கலை பயிர்கள் பயிரிடும் நிலத்தில் அமைப்பது தான் வழக்கம். தற்போது, பொள்ளாச்சி பகுதியில் பெய்யும் பருவமழையால்,தென்னந்தோப்புகளில் களைச்செடிகள் அதிகளவு வளர்ந்து, களை அகற்றுவதில், விவசாயிகளுக்கு சவாலாக மாறியுள்ளது.இந்நிலையில், தோப்புகளில் ஆட்டு கிடை போட்டு, அவற்றை மேய விடும் போது, களைச்செடிகளை உணவாக்கி விடுகின்றன. மேலும், ஆட்டின் கழிவுகள், தோப்புக்கு உரமாகவும் கிடைத்து விடுகிறது. இந்த முறையை விவசாயிகள் பின்பற்ற துவங்கியுள்ளனர்.ஊடுபயிர் சாகுபடி இல்லாத தோப்புகளில், இந்த முறை நன்கு பலனளிப்பதாகவும், மற்ற களை கட்டுப்பாட்டு முறைகளோடு ஒப்பிட்டால், பக்க விளைவுகளும் இல்லை; செலவுக்கு இணையாக உரமும் கிடைத்து விடுகிறது என்கின்றனர் விவசாயிகள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X