அமெரிக்க உளவு பிரிவு இயக்குனர் தலிபான் தலைவருடன் ரகசிய பேச்சு

Updated : ஆக 25, 2021 | Added : ஆக 25, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
வாஷிங்டன் : அமெரிக்க உளவுப் பிரிவு இயக்குனர் வில்லியம் ஜே பர்ன்ஸ் ஆப்கன் சென்று தலிபான் தலைவர் அப்துல் கனி பரதரை ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆப்கனில் இருந்து அமெரிக்க ராணுவம் இம்மாத இறுதிக்குள் வெளியேற வேண்டும். அத்துடன், அங்குள்ள ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் மற்றும் நேச நாட்டு படையினரையும் அழைத்துச் செல்ல வேண்டும். இந்த கெடு முடிய சில
CIA Chief, Taliban Leader,Afghan, William Burns, Mullah Abdul Ghani Baradar

வாஷிங்டன் : அமெரிக்க உளவுப் பிரிவு இயக்குனர் வில்லியம் ஜே பர்ன்ஸ் ஆப்கன் சென்று தலிபான் தலைவர் அப்துல் கனி பரதரை ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கனில் இருந்து அமெரிக்க ராணுவம் இம்மாத இறுதிக்குள் வெளியேற வேண்டும். அத்துடன், அங்குள்ள ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் மற்றும் நேச நாட்டு படையினரையும் அழைத்துச் செல்ல வேண்டும். இந்த கெடு முடிய சில நாட்களே உள்ள நிலையில், 'அனைவரையும் வெளியேற்றும் வரை ஆப்கனில் அமெரிக்க ராணுவம் தொடர்ந்து இருக்க வேண்டும்' என, பிரிட்டன் உள்ளிட்ட நேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.


latest tamil news


ஆனால், 'அமெரிக்கா உறுதி அளித்தபடி வெளியேறாவிட்டால் நிலைமை விபரீதமாகும்' என, தலிபான் அமைப்பு எச்சரித்துள்ளது. இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவுப்படி உளவுத் துறை இயக்குனர் வில்லியம் ஜே பர்ன்ஸ் ரகசியமாக ஆப்கன் சென்று, தலிபான் தலைவர் அப்துல் கனி பரதரை சந்தித்து பேசியதாக, அமெரிக்காவின் 'வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இருவரும் பேசிய விபரங்கள் வெளியாகவில்லை. எனினும் அமெரிக்க ராணுவம் காபூல் விமான நிலையத்தில் உள்ளோர் அனைவரையும் வெளியேற்றும் வரை இன்னும் சில காலம் தங்கியிருப்பது குறித்து, இருவரும் விவாதித்திருக்கக் கூடும் என கூறப்படுகிறது. இது குறித்து அடுத்த சில நாட்களில் அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J. G. Muthuraj - bangalore,இந்தியா
25-ஆக-202108:49:28 IST Report Abuse
J. G. Muthuraj இந்த ரெண்டு பேரில்ல யாருப்பா 'தலிபான்'? ரெண்டு பேருமேவா?.....
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
25-ஆக-202105:32:53 IST Report Abuse
Kasimani Baskaran உலகுக்கே தெரிந்து விட்டது. இதில் என்ன இரகசியம் இருக்க முடியும்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X