பொது செய்தி

தமிழ்நாடு

ரோடு பணிக்காக கால்வாய் கரை அகற்றம்: தாமதத்தால் நீர் விரயம் அதிகரிப்பு

Added : ஆக 25, 2021
Share
Advertisement
உடுமலை;நான்கு வழிச்சாலை பணிக்காக, உடுமலை கால்வாய் கரைகள் அகற்றப்பட்டுள்ளதால் நீர் விரயம் அதிகரித்துள்ளது.பி.ஏ.பி., பாசனத்திட்டம், உடுமலை கால்வாய் வாயிலாக, 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வரும் நிலையில், தற்போது நான்காம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ( நகாய்) வாயிலாக, பொள்ளாச்சி- திண்டுக்கல் நான்கு வழிச்சாலை

உடுமலை;நான்கு வழிச்சாலை பணிக்காக, உடுமலை கால்வாய் கரைகள் அகற்றப்பட்டுள்ளதால் நீர் விரயம் அதிகரித்துள்ளது.பி.ஏ.பி., பாசனத்திட்டம், உடுமலை கால்வாய் வாயிலாக, 40 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வரும் நிலையில், தற்போது நான்காம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ( நகாய்) வாயிலாக, பொள்ளாச்சி- திண்டுக்கல் நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து வருகிறது. இப்பணியில், பி.ஏ.பி., உடுமலை கால்வாய் கடக்கும், 4 இடங்களில், கான்கிரீட் கரைகள் அகற்றப்பட்டு, மண் கரையாக காணப்படுகிறது.தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்படாத நிலையில், மண் கரையாக உள்ளதால், நீர் விரயம் அதிகரித்துள்ளதோடு, மண் கரையாக உள்ளதால், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.இதனால், பாசன நிலங்களுக்கு போதியஅளவு நீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதோடு, கடை மடைக்கு நீர் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.எனவே, பாலம் அமைக்கும் பணிகளை விரைந்து மேற்கொள்ளவும், கால்வாய் கரைகளை, மீண்டும் கான்கிரீட் தளம், சுவர்கள் அமைக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.பி.ஏ.பி., அதிகாரிகள் கூறுகையில், 'ரோடு பணிக்காக கால்வாய் தோண்டப்பட்டுள்ளது. தண்ணீர் நிறுத்தப்பட்டதும், உடனடியாக சரி செய்து தருவதாக நகாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாலம் உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து நடக்கும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X