ஜூனியர் உலக கோப்பை வாலிபால் இந்திய அணியில் எஸ்.டி.சி., மாணவர்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜூனியர் உலக கோப்பை வாலிபால் இந்திய அணியில் எஸ்.டி.சி., மாணவர்

Added : ஆக 25, 2021
Share
பொள்ளாச்சி:ஜூனியர் உலக கோப்பை வாலிபால் போட்டிக்கான இந்திய அணியில், பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி மாணவர் இடம் பெற்றுள்ளார்.ஈரான் தலைநகர் டெகரானில், 19 வயதுக்கு உட்பட்ட ஜூனியர் உலக கோப்பை வாலிபால் போட்டி, நேற்று துவங்கி, செப்.,2ம் தேதி வரை நடக்கிறது. நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படுகின்றன.அதில், பங்கேற்கும் இந்திய அணியின் தேர்வு ஒடிசா மாநிலம்

பொள்ளாச்சி:ஜூனியர் உலக கோப்பை வாலிபால் போட்டிக்கான இந்திய அணியில், பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி மாணவர் இடம் பெற்றுள்ளார்.ஈரான் தலைநகர் டெகரானில், 19 வயதுக்கு உட்பட்ட ஜூனியர் உலக கோப்பை வாலிபால் போட்டி, நேற்று துவங்கி, செப்.,2ம் தேதி வரை நடக்கிறது. நான்கு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படுகின்றன.அதில், பங்கேற்கும் இந்திய அணியின் தேர்வு ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் அமைந்துள்ள கே.எல்., பல்கலைக்கழகத்தில், கடந்த மாதம் நடந்தது. அதில், 20 பேர் கொண்ட உத்தேச அணி தேர்வு செய்யப்பட்டு, கடந்த ஒரு மாதம் பயிற்சி அளிக்கப்பட்டது.அதன்பின், 12 பேர் கொண்ட இந்திய ஜூனியர் அணி அறிவிக்கப்பட்டது. இந்திய அணியில், பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரி முதலாமாண்டு மாணவர் வேணு இடம் பெற்றுள்ளார்.ஓசூரைச் சேர்ந்த இவர், திருச்சி விளையாட்டு விடுதியில் பயின்றார். கடந்த, 2018ம் ஆண்டு பஞ்சாப்பில் நடந்த ஜூனியர் வாலிபால் போட்டியில், தமிழகத்தின் சார்பில் பங்கேற்று மூன்றாமிடமும், கடந்தாண்டு ஆந்திராவில் நடந்த ஜூனியர் வாலிபால் போட்டியில், தமிழகம் சார்பில் விளையாடி, இரண்டாமிடமும் பெற்றார்.கல்லுாரியின் தலைவர் விஜயமோகன், துணை தலைவர் சேதுபதி, செயலர் வெங்கடேஷ், முதல்வர் சோமு, முதன்மை இயக்குனர் நந்தகோபால், உடற்கல்வி இயக்குனர் பாரதி, பயிற்சியாளர் சந்திரசேகரன், விளையாட்டுக்குழு ஆலோசனைக்குழு உறுப்பினர் செல்லமுத்து, துணை இயக்குனர்கள் ரேவதி, சதாம் உசேன் ஆகியோர், மாணவனை பாராட்டினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X