பொள்ளாச்சி;பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நாளை (26ம் தேதி) நடக்கிறது.பொள்ளாச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பி.ஏ., ஆங்கிலம், பி.எஸ்.சி., கணிதம், பி.பி.ஏ., பி.காம்., (சி.ஏ.,), பி.காம்., (பி.ஏ.,) ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன. இதற்கு, 1,712 விண்ணப்பதாரர்களின் தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தொடர்ந்து, கலந்தாய்வு நாளை நடக்கிறது.கல்லுாரி முதல்வர் (பொ) ராஜ்குமார் அறிக்கை:கல்லுாரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, 26ம் தேதி நடக்கிறது. காலை, 11:00 மணிக்கு, மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுதாரர்களுக்கு நடக்கிறது.தொடர்ந்து, வணிகவியல் மற்றும் வணிக நிர்வாகத்துறைக்கு விண்ணப்பித்த தரவரிசை எண், 001 முதல், 150 வரை உள்ளவர்களுக்கு, 27ம் தேதி; தரவரிசை எண், 151 மதல், 300 வரை உள்ளவர்களுக்கு, 28ம் தேதிகளில், காலை, 10:00 மணிக்கு கொரோனா தொற்று வழிகாட்டுதலின்படி சமூக இடைவெளியுடன் கலந்தாய்வு நடக்கும்.வரும், 31ம் தேதி காலை, 10:00 மணிக்கு கணிதவியலுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவ, மாணவியருக்கும் கலந்தாய்வு நடக்கும். வரும் செப்.,1ம் தேதி காலை, 10:00 மணிக்கு ஆங்கிலத்துறைக்கு, தரவரிசை எண், 001 முதல் 200 வரை உள்ள மாணவ, மாணவியருக்கு கலந்தாய்வு நடக்கும்.கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள், தேவையான சான்றிதழ்கள் மற்றும் பெற்றோருடன் பங்கேற்க வேண்டும். பள்ளி மாற்றுச்சான்றிதழ், பிளஸ்2 மதிப்பெண், பிளஸ்1 மதிப்பெண், ஜாதிச்சான்றிதழ், ரேஷன்கார்டு, இருப்பிட சான்றிதழ் உள்ளிட்டவை அசலுடன், ஒவ்வொரு சான்றிதழ்களும் தலா மூன்று நகல்களும் கொண்டு வர வேண்டும்.பாஸ்போர்ட் அளவு போட்டோ ஐந்து, ஆதார் கார்டு அசல் மற்றும் மூன்று நகல் கொண்டு வர வேண்டும். இவ்வாறு, அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE